அத்தியாயம் 1

4.6k படித்தவர்கள்
6 கருத்துகள்

பஞ்சதந்திரக்கதை


வரலாறு.

கல்விப்பொருளிலுஞ் செல்வப்பொருளிலுங் குறையில்லாதவர்களுக்கு கூறயிடமாயிருக்கிற பாடலிபுறமென்னுமொரு பட்டினமுண்டு அப்பட்டினத்திற் சகல குணங்களோடுங் கூடியிருக்கிற சுதரிசனென்னும் ராசன் ஒருவனிருந்தான். அந்த ராஜா தன்பிள்ளைகள் படியாமல் மூடர்களா யிருக்கிறதைக்கண்டு வெகு விசனத்தோட ஆலோசிக்கத் தொடங்கினான். அஃதெப்படி யென்றால் கல்வியுந் தர்மகுணமுமில்லாத பிள்ளைகளிருந்தாவதென்ன பால்கொடாத வெருமைகளைக் காப்பாற்றி பலனுண்டாவதென்ன வேதசாஸ்திர மறிந்தவனாக ஒரே பிள்ளையிருந்தா லவனாலே குடும்பமெல்லாஞ் சுகமடையும். இப்படிக்கில்லாத பிள்ளைகள் கற்பத்திலேயே யழிந்தானாலும் அழியாவிட்டாற் பிரந்தவுடனே இறந்தானாலும் இரவாவிட்டாற் பெண்ணாகவானாலும் இல்லாவிட்டாற் பெண்சாதி மலடியாகவானாலும் போகிறது நல்லகுலத்தில் யோக்கியமான பிள்ளை இருக்கலாகாது சன்மாந்திர புண்ணியத்தினாலே இம்மை மறுமைக்கு சுகங்கொடுக்கிற புத்திரனுண்டாகிறான் பாபத்தினாற் குலத்தைக் கெடுக்கிற புத்திரனுண்டாகிறான் மேலு மிந்தப் பிள்ளையைப் பெற்றவர்கள் என்ன தவஞ் செய்தவர்களோ வென்று கண்டோர் சொல்லும்படி நடக்கிறவனல்லவோ பிள்ளையென்று தனக்குள்ளே ஆலோசித்துப் பெருமூச்சு விட்டுப் பின்பு சபையைப் பார்த்து பருவமும் செல்வமும் ராச்சியமும் அறிவில்லாமையுமாகிய இந்த நான்கிலு ளொன்ரொன்று தானே கேட்டுக்கொல்லா மிகுந்த துணையாயிருக்கும் இந்த நான்கு மொருவனிடத்திலிருந்தால வனென்னபாடுபடான் ஆகையால் பிள்ளை எண்ணிக்கைக்குப் பிறந்து துர்மார்க்கர்களா யிருக்கிற வென்பிள்ளைகளை நீதி சாஸ்திரோபதேசத்தில் யெந்த மகாபுருஷன் மறுஜனனம் வாப்பண்ணுவானென அப்போது சகல நீதி சாஸ்திரங்களிலும் வல்லவனாகிய சோமசன்மா வென்பவனெழுந்து இவர்களுக்குச் சமா வரிசையுடையவர்களில் வுலகத்திலில்லை-யென்று சொல்லும்படி எதோ நான் ஆறு மாதத்திற் செய்ய மாட்டுவேன் அதுவரைக்கும் நீர் நாளை யெண்ணிக்கொன்டிருமென்று சபதம் பண்ணினான்.


அதைக் கேட்டு நடுகடலிற்றிசை தப்பியாகிய மாலுமிக்கோர் துரை ோற்றினாற்போல ராசா மிகவுமனமகிழ்ந்து அவனுக்கு உபசாரஞ்செய்து தன்னுடைய பிள்ளைகளை அவன் வசத்தில் ஒப்பிவைத்தான். சோமசன்மா உடனே அப்பிள்ளைகளைத் தன் வீட்டுக்கழைத்துக் கொண்டு போய்க் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி சர்க்கரைக் கட்டியாகத் திரட்டினாற் போல நீதி சாசாஸ்திரங்களைப் பஞ்சதந்திரக் கதையாகக் கற்பித்து ராஜ குமாரர்களுக்குச் சொல்லத் தொடங்கினான். அஃதெப்படியென்றால் சோமசன்மா ஓ ராசகுமாரர்களே உங்களுக்கு வேடிக்கையாகச் சில கதைகளைச் சொல்லுகிறேன் கேளுங்களென்று சொல்ல அதென்ன கதையென்றார்கல். பஞ்ச தந்திரக்கதையென்று சொன்னான். பஞ்சதந்திரமென்பதென்ன தெரியச் சொல்ல வேண்டுமென்றார்கள். அவை மித்திரபேதம், சுகிர்தலாபம், சந்திவிக்ரகம், அர்த்தனாசம் அல்லது லப்த ஆனி, அசம்பிரேக்ஷிய காரியத்துவம் என ஐந்து தந்திரங்களுண்டு; அவைகளுள் மித்ரபேதமாவது சினேகத்தைக் கெடுத்துப் பகையுண்டாக்கல்; சுகிர்தலாபம் தங்களுக்குச் சமமானவர்களோடு கூடிப் பகையில்லாமல் வாழ்ந்திருக்குதல்; சந்தி விக்கிரமாவது பகைவரையடுத்து உறவுசெய்து வெல்லுதல்; அர்தநாசமாவது தன் கையிற் கிடைத்த பொருளையழித்தல்; அசம்பிரேக்ஷிய காரியத்துவமாவது யாதொரு காரியத்தையுந் தீரவிசாரியாமற் செய்தல் என்று சொன்னான். ராஜகுமாரர்கள், ஐயா அந்தக்கதைகளை எங்களுக்கு விளக்கச் சொல்லவேண்டுமென் றார்கள். சோமசன்மா உங்களுக்கு மங்கள முண்டாகவென் றாசீர்வதித்துச் சொல்லத்தொடங்கினான்.


வரலாறு முற்றிற்று.

-----------------------------------------------------------

முதலாவது
மித்திரபேத தந்திரம்

ஒரு காட்டிலொரு சிங்கமும் எருதுங்கூடி மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்திருந்தன. அந்த சினேகத்தைக் கோள் சொல்லும் லோபகுணமுள்ள ஒரு நரி வந்து கெடுத்ததென்று சொல்ல ராச குமாரர்கள் அதெப்படியென சோமசன்மா சொல்லத் தொடங்கினான்.


தென்னாட்டிலே மகிழாரூப்பமென்னும் பட்டணத்தில் வர்த்தமானனென்றொரு வர்த்தகனிருந்தான். அவனுக்கு வெகு பணமிருந்தும் இன்னும் சம்பாதிக்க வேண்டுமென்கிற ஆசையினால் யோசிக்கலானான். எப்படியென்றால் யாதொன்று சம்பாதிப்பது அருமையோ அதை சம்பாதிக்கவேண்டும்; சம்பாதித்ததைக் காப்பாற்ற வேண்டும்; காப்பாற்றினதை விருத்தி பண்ணவேண்டும்; விருத்தி பண்ணினதை தானும் அனுபவித்து உத்தம மாத்திரத்திற் செலவழிக்க வேண்டும்; ஏனென்றால் காப்பாற்றாத திரவியம் நாசமாகும் விருத்தி பண்ணாதது குறையும்; தானும் அனுபவித்துச் சற்பாத்திரத்திற் செலவழியாதது வீணாகுமென்றும் சாஸ்திர மிருக்கிறதினாலும் மேலும் இன்பமும் புண்ணியமும் கீர்த்தியும் மனிதற்குள்ளே பெருமையும் உறவும் நினைத்ததை முடித்தலும் யாருக்குண்டு திரளாகப் பணங்குவித்தவர்களுக்கே யுண்டு; அல்லாதவர்களுலகத்திலே நடைப்பிண மாவார்களாகையினாலும் மென்மேலும் சம்பாதிப்பதே யோக்கியமென்று ஆலோசித்துக் கொண்டு தன்னிடத்திலிருக்கிற சரக்குகளை வண்டியிலேற்றி அதில் சஞ்சீவகன் நந்தகனென்னும் பெயரையுடைய இரண்டு எருதுகளைப் பூட்டி நடத்திக் கொண்டு தேசாந்திரம் போனான். போகும்போதொருநாள் நெருங்கிய காட்டிலே மிகுந்த பாரத்தினாற் சஞ்சீவகனென்னும் எருது காலிடறி விழுந்து நொண்டியாச்சுது. அப்போது வர்த்தமானன் அந்த எருதுக்குப் பதிலாக வேறோரெருதை வண்டியிற் கட்டி யோட்டிக்கொண்டு அவ்வெருதுக் கோராளை காவல் வைத்துப்போனான். பிறகந்தச் சேவகன் வர்த்தகனிடத்துக் கிரண்டொருநாள் கழித்துப் போயந்த எருது செத்துப்போச்சுதென்று புளுகினான்.


இங்கே எருதோவென்றால் ஆயுசு பலத்தினாற் பிழைத்துப் புல்லு முதலாகிய மேச்சலால் மிகவும் பெருத்துக் கொழுத்து ஒடிந்த காலுங்கூடி அந்த காட்டில் யதேச்சையாகத்திரிந்துக் கொண்டிருந்தது. அப்படியிருக்கையில் ராச்சிய பட்டாபிஷேக சடங்குகளில்லாமல் காட்டிற் சஞ்சரிக்கிற பிராணிகளுக்கெல்லாந் தன்வல்லமையினா லிராசத்துவத்தை யடைந்திருக்கிற சிங்கமானது தன் பராக்கிரமத்தாற் சம்பாதிக்கப்பட்ட ராச்சியத்தைச் சுகமாக யனுபவித்துக் கொண்டிருக்கையில் ஒருநாள் தாகமெடுத்துத் தண்ணீர் குடிக்க யமுனையாற்றங்கரைக்குப் போகும்போது அங்கே சடுதியிலென்றைக்குங் கேட்டறியாத பேரிடி முழக்கம்போலும் அந்த ரிஷப முக்காரம்போட்ட தொனியைக்கேட்டு திடுக்கிட்டேது புதிதா யிருக்கிறதென்று பயந்து நடுங்கித் தண்ணீர் குடியாமற் சும்மாவசைவற நின்றுவிட்டது. அப்போது யவ்விடத்திலிருந்த சிங்கத்தினுடைய பிரதான மந்திரி குமாரராகிய கரடகன் தமனகனென்கிற மந்திரிகளிரண்டு மிந்தவதிசயத்தையறிந் தொன்றுக்கொன்று பேசத் தொடங்கின தெப்பெடியென்றால் தமடகன் கரடகனைப் பார்த்து நம்முடைய ராசா தண்ணீர்க்குப்போய் குடியாமலேன் சும்மா நிற்கிறாறென கரடகன் அதை விசாரிக்கிறதினால் நமக்காவதென்ன இறையகப்படுமா பெருமை யுண்டாகுமா கிணற்றுத்தவளைக்கு நாட்டு வளப்பமேன் சும்மாவிருப்பேனென்றால் தனக்குத்தகாத காரியத்தைச் செய்கிறவன் கடாவிய வாப்பைபிடுங்கின குரங்கு பட்டபாடு படுவானென்று சொல்ல அதென்னவென்று கரடகன் கேட்க தமனகன் சொல்லுகிறது,


மகத தேசத்திலிருக்கிற சுகத்தனென்போனொருவன் கோயிற்றிருப் பணியாகக் கொண்டு வந்தருக்க மரங்களில் வாட்காரன் பிளக்கும்படி முளைகளடித்து விட்டுப்போன வொருமரத்தின் மேலந்தக் கோயில் னந்தவனத்திலிருக்கிற குரங்குகளிலொன்று வந்துட் கார்ந்தது. அப்போது அம்மாப்பிளப்பிற் றனபீசமிறங்கி யிருப்பதை யறியாமலடித்த முளையையசைத்து பிடுங்கினவுடனே பிளப்பு நெருங்கிப் பீசநசுங்கி யருந்தது. ஆதலால் தனக்குத் தகாத காரியத்தைச் செய்தால் யார்க்கும் பிராணச்சேதம் வருமென்று சொல்லி நேற்று நாம் தின்று மிகுந்திருக்கிற யிரையைத்தின்று சுகமாயிருப்போம் வாவென்று கரடகனழைத்த பின்பு தமனகன் கரடகனைப் பார்த்து சுவாமி காரியஞ்செய்யாம லிறைதேடுகிறதையே பெரிதாக நினைக்கலாமா ஒருவன் தன்மித்திரர்களுக் குபகாரமுஞ் சத்துருக்களுக் கபகாரமும் பண்ணவேண்டும் அதற்கு ராஜ சேர்வையே தக்கது மேலும் ராசாவை யடுத்திருக்கையில் வெகுசனங்களுக்கு நன்மை செய்வதே ராச சேவைக்குப் பிரயோஜனமாம் இல்லாவிடிற் காக்கையுங் காசுபுலியையு மெச்சிலையையு மலத்தையுந் தின்றாயிரம் வருஷம் பிழைத்திருக்கிறது நாயும் பசையில்லாத வெள்ளெலும்பை கௌவிக் கடித்துப் பல்லசைந்தும் பசிதீராமற் சந்தோஷத்தையடைகிறது.


மேலுமெசமானுன் கையிலிருக்கிற வொருதவள வெச்சிலைப் பார்த்துக் கால்லிழுத்து வயிற்றை யெக்கிக்கொண்டு துளியீ முகத்தை காட்டி முதத்தைப் பார்த்து வாலைக் குழைத்துக் கெஞ்சிக்காததுக்கிடந்து கொஞ்சமெச்சிலை வாங்கித் தின்னும் யானையோ பாகனைப் பாராமலு மருக்காமலுமவன் வேண்டி வேண்டி வலியக்கொடுக்க கரவத்தோடு வாங்கி நாயைக்காட்டிலு மாயிரம்பங் கதிகஞ் சாப்பிடும் சிங்கம் பசியினாற் சங்கடப்படும்போது நரி சமீபத்திலிருந்தாலும்தை சட்டைப்பண்ணி யானையையே கொல்லும் ஆதலாலுலகத்தில் யார் புகழோடுசீவிக்கிறார்களோ அவர்களே பாக்கியவானகள் சிறுகுழிகள் கொஞ்சந் தண்ணீரால் நிறையும் எலியின் சோங்கை சில தானியத்தால் நிறையும் யப்படி போலமூடன் இதாகிதந் தெரியாமற் கொஞ்சத்திலே சீவனம் பண்ணுவான் ஆனாலவனுக்கும் பசுவுக்கும் மென்னபேதம் ஆகையால் ராச காரியம் பார்த்து பெருமையுடனே சீவிக்கிறதே நல்லதென்றிப்படி சொல்லக் கேட்டு கரடகன் தமனகனைப் பார்த்துச் சொல்லுகிறது

நல்லது யிந்த யோசனைகளுக்கு மிகதப் பேச்சுகளுக்கு மிப்போது நாம் ராச காரியத்திலிருக்க வில்லை இறைதேடுகிற காரியத்திலிருக்கிறோம் ஆதலால் நீஏன வீணான மனோராச்சியம் பண்ணுகிறாய் முடவன் கொம்புதேனுக் காசைப்பட்டாற் கிட்டுமோ வென்றிகழ்ந்துசொல்ல தமனகன் சொல்லுகிறது நல்லதிருக்கட்டும் பிரதானியுங் காலத்தினாலப் பிரதானியாகிறான் தன் முயற்சியாலுங் குணத்தினாலும் வலுவானவனுஞ் சமர்த்தனாகிறான் அல்லாமலும் யாவருமேலான காரியத்தையே ஆலோசிக்க வேண்டும் அது கைகூடா விட்டாலும் பெருமை வரும் புத்திசாலிகளருமையான காரியங்களைச் செய்வார்கள் மலையுச்சியிலொரு பெருங் கல்லை யேற்றுதலரிது அங்கிருந்ததைத் தள்ளுதலெளிது ஏரியிநீரைக் கட்டுதலரிது உடைத்தலெளிது ஆகையால் பெருமையுஞ் சிரும்மையு மவராலேயே வரும் முயற்சியுடைய ரிகழ்சியடையாரென்னும் பழமொழியினாலும் கேட்டிலை யாவென் றிப்படிச் சொல்ல தமனகனை கரடகன் பார்த்து நல்லது நீ போய்ச் சிங்கத்தினிடத்தி லெதை குறித்துப் பேசுவாயென தமனகன் நம்முடைய சுவாமி மூடத்தனத்தாற் பயந்திருக்கிறான் அதை நீ எப்படியறிந்தாயென்று கேட்கிறையோ சொன்ன பொருளைப் பட்சி மிருகங்களு மறிந்துகொள்ளும் சொல்லாலறிகிறவனே பண்டித னப்படி அறியாவிட்டாற் புத்தியாற் பிரயொசனமெனன ஆகையால் நானிங்கிருந்தபடியே யறிந்தேன் இப்போது நானிதை முன்னிட்டு கொண்டுபோய்ச் சிங்கத்தை சினேகம் பண்ணிக் கொள்ளுகிறேனென தமனகனைப் பார்த்து கரடகன் சொல்லுகிறது நம்முடைய ராசாக்கள் மோந்து கொள்வதுபோற் கடிக்கிறவர்கள் அரசரும் நெருப்பும் பாம்புஞ்சரி ஆதலால் பழக்கமில்லாமலன்னை எப்படி சினேகம் பண்ணிக்கொள்வாயென அப்போது பெரிதுபரக்கிற பரவைகளுக் கெதுதூரம் வித்வானுக் கெதுபரதேசம் பிரியமாய்ப் பேசுகிறவர்களுக் கெவன் சத்துருவென கரடகனப் படியானாலும் ராசாக்களிடத்தில் அக்காலத்திற் போனால் அவமானம் நேரிடுமென்றது அதற்குத் தமனகன் சமீபத்திலேயே யிருக்கவேண்டும் ஏனென்றால் யார் சமீபத்திலிருக்கிறானோ அவனுடனே ராசாக்கள் காரியங்களைச் சொல்லுகிறார்கள் கொடிகள் கிட்டயிருக்கிற மரத்திலேயே படரும் அரசர்களும் ஸ்ரீகளும் தங்களைகாத் திங்கிதம் பேசுகிறவர்களிடத்தில் மனதிரங்குவார்களென கரடகன் நல்லது நீயவனிடக்தி லெப்படி பேசுவாயென்றது தமனகன் நல்ல மழை பெய்திருக்கையி லெப்படி விரையினின்று முளைகள் புறப்படுமோ அப்படிபோல ராசாவின் கேள்விக் கேட்க வென்வாக்கினின்று முத்தரவு புறப்படும் ஆயினுமொருவேளை பிரகஸ்பதியும் பேச்சிற்றவறு வானானால் மற்றவர்களுக்குக் கேட்பானேன் ஆயினுங் காலமறிந்து பேசினால் யாதோரவமானமும்வராது ராசா தன்காரியம் யாராலேயாகிறதோ அதனிடத்தி லொருவேளை சிறிதுகுற்ற நேரிட்டாலுமதை பாராட்டாமலவனைப் பரிபாலித்து விர்த்தியடையப் பண்ண வேணும்மென கரடகன் அரசர்கள் மலை போலனுசரிகிற தற்குக் கடினமா-யிருக்கிறார்களென தமனகன் ஆயினு மவர்கள் சுபாவ மறிந்து பேசித்தன கிஷ்டம் பண்ணிக் கொள்ள வெண்டுமென்று கரடகனிடத்திற் செலவு பெற்றுக்கொண்டு சிங்கத்தினிடத்திற்குப் போய்த் தூரத்திலே நின்று தண்டம் பண்ணி ராசாவினுத்திரவினா லுட்கார்ந்தவுடனே சிங்கம் நெடுநாளாக யுன்னைக் காணோ மென தமனகன் இப்போதுதேவரீரிடத்திற்குவர் *** (text not clear) நேரிட்டதனாற் தங்களுடை திருவடியண்டை வரலானேன் இல்லா விட்டால் வந்ததற்குப் பிரயோசனமென்ன ராசாக்களுக்-கொருவராலும் பலனில்லா விட்டாலுமொருவேளை சிறு துரும்புப் பல்லுக்குதவுமுதவும் மற்றவைகளுக்கு கேட்பானேன் மேலும் ஒருவேளை அரசர்கள் குணவானை அசட்டை பண்ணித் தள்ளி விட்டாலுமவன் சற்குணம் போய்விடுமா நெருப்புத் தலை கீழாகுமா ஆதலாலரசர்கள் பரிசோதித்தறிந்து யோக்கியனை நல்ல காரியத்தில் வைத்தாலவன் ராசாவுக்கு கீர்த்தியைப் பெருகப் பண்ணுவானாகையா லென்னைத் தாங்கள் சிறுநரியென்று அவமானம் பண்ணலாகாது விஷ்ணு கொடுத்திருக்கிற வராக வடிவையுலகத்தில் பூசிக்கவில்லையா என் ரூபத்தைப் பாராமற் குணத்தைப் பார்க்கவேண்டும் ஏனென்றால் மலைபோலிருக்கிற தேர்சிறு சுள்ளாணியா னிலைபெறும், நானோ சுவாமி காரியத்திற் பற்றுள்ளவன், கருவியுங் காலமுமறிந்து கருமமுடிக்க மாற்றலுள்ளவன், இந்த வல்லமை யெல்லாமு மதுசார்பிருந்தாற் பிரகாசிக்கும், வாள் முதலிய ஆயுதங்களும், வீணைமுதலிய வாத்தியங்களும், பூமியும், ஸ்திரீகளும் யோக்கியர்களுஞ் சாஸ்திரங்களுமாகிய விவையெல்லாம் பரிபாலனம் பண்ணுகிறவர்களாற் பிரகாசிக்கும் அண்டையிற் சமர்த்த னில்லாத ராஜாவுக் கபகீர்த்தி வரும் என்றிப்படிச் சொல்லக்கேட்டு

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

சிங்கம் தமனகா நீயென்பிரதானி பத்திரனல்லவா என தமனகன் சுவாமியென்று வணங்கிச் சும்மா விருந்தது சிஙகம் எதாவது சொல்லவேண்டுவதிருந்தாற சொல்யென தமனகன் தேவரீர் தண்ணீர்க்கு வந்து குடியாமல் மெய் மறந்து சும்மா நிற்கிறீர்களே என சிங்கம் மெய்தான் நானிந்தக் காட்டில் வெகு நாட்சுகமாயிருந்தேன் இப்போதிதை விட்டுவிடத் தக்கதாகச் சம்பவித்திருக்கிறது என்றைக்குங்கேளாத மேக முழக்கம் போலொரு தொனி இன்றைக்குக் கேட்டேன் அதனாலே தானந்த முழக்கம் போலவே யிருக்குமல்லவோ அந்தப் பிராணியும் ஆதலால் லிதைக்குறித்தென்ன சொல்லுகிறாயோ வதுவே யனக்குப்பிரமாணம் இப்போது நீவழுக்கி விழுக்கி விழுகையி லூன்றுகோல் போற்கிடைத்தாய் என தமனகன் சுவாமி தொனியினாலே பயப்படலாகாது முன்னொருவன் ஒரு தொனியைக் கேட்டு பயந்து பிறகு நெருங்கப் பார்த்தவுடனே யங்கே தோலுங்கோலு மிருக்கக் கண்டான் என சிங்கம் அதென்னயென்று கேட்க தமனகன் ஒரு நரி பசியால் வருந்தி யிரைக்காகத் திரிந்தொரு போர்க்களத்தில் வரும்போதங்கே அசதியாலுண்டான ஒருபெரிய தொனியைக்கேட்டு மிகவும் பயந்து நான் செத்தேனென்று திடுக்கிட்டது பிறகு சற்றே முன்னே போனவுடனங்கொரு பெரிய பேரிகையைப் பார்த்து அடுத்திருக்கிற மரத்தின் கிளை காற்றிலசைந்ததி லடிக்கத் தொனியுண்டாயிற்றென் றறிந்துக்கொண்டு அதனருகே போய்ப் பார்த்து அங்கே பேரிகையின் றோலுங்கோலுமே யல்லாமல் வேறொன்று மில்லையெனத் தெளிந்து சந்தோஷமடைந்தது ஆதலாற் சத்தத்தினாலே மாத்திரம் பயப்படலாகாது தாஙகள் கட்டளை கொடுத்தாலிந்த க்ஷணத்திலதன் மூலத்தை யறிந்து வருவேன் என சிஙகம் அப்படியே செலவு கொடுத்தது


பிறகு தமனகன் சஞ்சீவகனென்னு மெருதினிடத்திற் போய்ப் பேசி அதை சினேகம் பண்ணிக் கொண்டு சிங்கத்தண்டை வந்து தண்டம் பண்ணி முன்னே நின்றது சிங்கம் நீயந்தப் பிராணியை யின்னதென்றறிந்து வந்தாயா என தமனகன் தாங்கள் கட்டளைப்படியே போய்ப் பார்த்தேன் முன் தாங்களெப்படி நினைத்தீர்களோ அப்படியே புஷ்டியாக யிருக்கின்றான் அவன்றங்கனட்பை விரும்புகிறான் கட்டளையானாற் றிரும்பிப் போய்த் தரிசனத்துக் கிட்டுக் கொண்டு வருவேன் என சிங்கம் நல்லதப்படியே யாகட்டுமென மறுபடிதமனகன் எருதண்டைபோய் யுபசாரத்தோடழைத்து வந்து ராஜாவை தரிசனம் பண்ணுவித்தது


பிறகு சிங்கத்துக்குஞ் சஞ்சீவனுக்கும் வெகு சிநேகமுண்டாய் ராஜாவுக்கு மற்றயாருமவசியமில்லாம லிப்படி வெகுகாலங் கழிந்தது அப்போது பிரதானி புத்திரர்களாகிய கரடக தமனகரென்னு மிரண்டு நரிகளுக்கு யிரையொன்றுமகப் படாமையால் ஆலோசிக்க தொடங்கினது தமனகன் நாம் காட்டிலே தனித்திருந்த சிங்கத்தினுடனே எருதை சிநேகம் பண்ணிவித்தது யானையானது தன்மத்தகத்தைக் கொத்துகிற தற்கு யங்குசத்தைத் தானே யெடுத்துப் பாகன் கையிற் கொடுக்கிறது போலாயிற்று மேலும் முன்னாளாட்டுக் கடாச் சண்டையில் நரி செத்ததும் ஆஷாடபூதியின் கூட்டுறவார் சந்நியாசி பொருளிழந்தது இடைச்சியின் சேர்க்கையா லம்பட்டத்தி மூக்கிழந்தது மெப்படியவர்கள் குற்றத்தினாலே சம்பவித்ததோ அப்படியே நம்முடைய தோஷத்தினாலே நமக்கிரை கிட்டாமற் போயிற்று என கரடகன் அதுயெப்படிச் சொல்லென தமனகன் சொல்லுகிறது


ஒருதேசத்திற் றேவசன்மா வென்கிற வொரு சந்நியாசிதான் பிச்சையெடுத்துச் சம்பாதித்த திரவியத்தைக் கந்தைக்குள் வைத்தியார்க்குந் தெரியாமற் றைத்துப் போர்த்துக்கொண்டு பின்னும் பிச்சை யெடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு திரிய அச்சூதையறிந்த ஆஷாடபூதியென்னு மொருதிருட்டு பிராமணன் இந்தக் கந்தையை மாத்திர மெப்படியாயினுந் திருடிக் கொண்டால் நாமெப்போதுந் திருட்டுவேலை செய்ய வேண்டுவதில்லை நம்முடைய தாசிக்கு வெகு நாளைக்கு நடக்குமென்றாலோசித்து ஒரு பிரமாசாரியைப் போல வந்தச் சந்நியாசியினிடத்திற்போ யவன் காலில் விழுந்து அடியேனுக்கு ஞானோபதேசஞ்செய் திந்த நிசாசரமாகிய சமுசார சாகரத்திநின்று மலையாமற் சிறிது கடைக் கண்ணாற் பார்த்தென்னைக் கடைத்தேற பண்ணும் ஓ மகானு பாவா ஓ பரதுக்கஞ்சகியாத பரமபுருஷா என்றிப்படி யழுத கண்ணுஞ் சிந்திய மூக்குமாகக் கலங்கிநிற்க அதை பாசாங்கென்றறியாத அந்தச் சந்நியாசி இவன்றலை மேற்கையை வைத்துப் பயப்படாதே என்றான்


அதுமுதலாக வா ஷாடபூதி வெகு பயபத்தியுடனே அவன் காலாலிட்ட வேலையைக் கையாற் செய்துக்கொண்டு கந்தைக்குச் சமயம் பார்த்துக்கொண்டு இருக்கும் நாளில் ஒரு நாள் ஒரு பிராமணன் வீட்டில் இருவரும் விலாப்புரம் வீங்கப் பிட்சைப் பண்ணிக்கொண்டு வெகுதூரம் வந்தபிறகு ஆஷாடபூதி யொருவரு மறியாம லொரு துரும்பை யெடுத்துத் தன்றலை மேலேவைத்துக்கொண்டந்தத்துரும்பைக் குருவுக்கெடுத்துக் காட்டி ஐயோ நமக்குப் பிட்சை கொடுத்த பிராமணன் வீட்டுத் துரும்பென் றலையிலொட்டி வந்து விட்டதோ அன்னமிட்ட வீட்டிற் கன்னமிடலாமா உப்பிட்டவரை யுள்ளளவு நினையென்று பழமொழியிமிருக்கிற தன்றோஎன வாய்பகற நடுநடுங்கி இதையந்த வன்னதாதா வீட்டிற் போட்டுவிட்டி தோநொடியளவில் வருவேன் என்று குருக்கள் பார்க்கும்படி பரபரப்பாகச் சிறிது தூரங் காலடிபிட்டத்திற் படும்படியோடி ஒரு செடி மறைவிலுட்கார்ந்திருந்துவிட்டு பின்பிரைக்க விரைக்கவோடி யந்தாசாரியன் காலில் விழுந்தெழுந்து சுவாமி உம்முடைய அநுக்கிரகத்தினாலிந்தப் பாவத்திற்குத் தப்பினேன் என்றான்


இதைப் பார்த்து அந்த ஏழைச்சந்நியாசி ஆச்சரியப்பட்டு இவன் பரசொத்துக்காசை படாத பரமாத்துமாவென்று நம்பித் தன்னுயிர்க்குச்சமானமாக நினைத்திருந்த கந்தையைச் சீஷன் கையிற் கொடுத்து ஒரு குளக்கரையிலிருக்கச் சொல்லித் தான் சலபாதைக்குப் போய் காலலம்பப் போனவிடத்தில் இரண்டாட்டுக் கடாக்களொன்றோடொன்று முட்டிச் சண்டை செய்ய அவைகளின் மண்டையிலிருந்-தொழுகிற வுதிரத்தை யுண்ணலாமென் றொரு நரி போயிரண்டுக்கு நடுவிலகப் பட்டிறந்தது,

அந்த அணர்த்தத்தைப் பார்த்துக்கொண்டு சிறிது நேரமிருந்தான் அப்ப்போதந்தச் சீஷன் இதுதானல்ல சமயம் இதுவிட்டாலினிக் கிட்டுமா காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டு மென்று நினைத்து கந்தைச் சுருட்டிக் கொண்டோடிப்போனான் உடனே சந்நியாசி வந்து பார்த்துச் சீஷனைக் காணாமல் ஓகோ நம்மை ஆஷாடபூதியேய்த் தானே நாம் மோசம் போனோமேயென்று திகிற்பட்டு உப்புக்கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தியைப்போல் ஒருவருடனுஞ் சொல்லாமற்றேடிக் கொண்டுபோயெங்குங் காணாம லன்றிராத்திரி ஒரு பெரிய பட்டணத்திலோரிடையன் வீட்டுத் தலைக்கடைத் திண்னையில் வந்து சேர்ந்து நித்திரையில்லாமற் படுத் தெண்ணமிட்டுக் கொண்டிருந்தான் பொருளிழந்த சந்நியாசி இப்படியிருக்கையில் நாடோறுந் தன்புருஷனில்லாத வேளை பார்த்துப் பரபுருஷனிடத்திற் போகிறவளாகிய அந்த வீட்டிடைச்சி அன்றைய தினமுந் தனக்குத் தூதிகையாகிய அம்பட்டத்தி வந்து கள்ளபுருஷன் வந்திருக்கிற செய்தி சொல்லக் கேட்டுத் தன்புருஷனில்லாதிருக்கக் கண்டவளுடனே கூடப்போனாள் போகும்போது புருஷனெதிரேவரக் கண்டு வேறொரு காரியத்திற்குப் போனவள்போற் சாக்கிட்டுக் கொண்டு திரும்பி வீட்டுக்கு வந்து விட்டாள் புருஷனந்தக்கபடத்தையறிந்து மிகுந்த கோபத்தோடும் போயவளைவாய் சலிக்கத்திட்டி யொரு தூணிற்கட்டி கைசலிக்க வடித் திராத்திரிக் கெலலாமிப்படியே யிரு வெள்ளாட்டியென்று நித்திரை செய்தான் பக்கத்துவீட்டுக்காரியாகிய அந்ததூதி மறுபடியும்வந்து ஐயோய வனங்கேயுன் விரகத்தினாற் செத்தாற்போற் கிடக்கிறானே இப்போது அவிழ்த்து விடுகிறே னென்னைக் கட்டிவைத்து நீ பாயந்தச் சோர புருஷனைச் சந்தோஷிப்பித்துவர மறுபடி நானுன்னைக் கட்டிவைத்துப் போகிறேனென்று சொல்ல இதுநல்லவு பாயந்தானென்று தூதியை அப்படியே கட்டிவைத்து விளக்கையு நிறுத்திவிட்டு இடைச்சிசோர புருஷனிடத்திற்குப் போயிருக்கும்போது யிடையன் விழுத்துக்கொண்டு தூணிற் கட்டுண்டிருப்பவளிடத்திற்குப் போய்க் கோபத்தாலடித் தானவளம் பட்டிந்தி உரவாமல் அதற்கொன்றுஞ் சொல்லாமலிருக்கக் கண்டவள் சோரம்போனது மெய்தானென்று மிகவுங் கோபித்து கத்தியை யெடுத்து மூக்கையறிந்து மறுபடியும் போய் நித்திரை செய்யும்போது போனவிடைச்சிசோர புருஷனை யனுபவித்துவந்து கட்டுண்டிருக்கிற தூதியைப்பார்த் தென்ன சமாச்சாரமென்றாள் தூதிமூக்குத் தவிர மற்றவையெல்லா மெதாப்பிரகார மிருக்கிறதென பிறகவனைவிட்டுப் பழயபடி யவளாற்றான் கட்டுண்டிருக்கை யிலிடையன் விழித்துக் கொண்ட னவ்வாவு மிவளறிந்து அதனைப் பார்த்தாயோ பாதகா வீணாகவென் மூக்கையறிந்து குரூபியாக்கி விட்டாயே ஒருவனுமொருத்திக்கும் பிறந்தொருவனுக்கு முன்றானை போட்டவளானாலென் மூக்கு வளரட்டுமென் சபதத்தை லோக ரட்சகன் கேட்டு கட்டுமென்று சொல்லிச் சும்மாயிருந்தான் இடையனுடனே யெழுந்தோடிவந்து பார்க்க பழயபடி மூக்கிருக்கக் கண்டு பயந்தாச்சரியப்பட்டிப் படிக்கொத்த பத்தினியொருத்தி யுலகத்திலிருக்கிறதினாலே தானே மழைபெய்கிறது கடலுங்கரையில்லாம னிற்கிறதென நினைத்துப் பெண்ணே குலவிளக்கே தீண்டானெருப்பேயென்று சாஷ்டாங்கமாக விழுந்து கட்டைய விழ்த்து விட்டுவிட்டான்


இதுயிப்படி இருக்க முன்மூக்கறுப்பட்டு முனைகுலைந்த தூதியான வளற்ற மூக்கை கையிலெடுத்துக்கொண்டு சீக்கிரமாகத் தன்வீட்டுக்குப்போய் யிதையெப்படி மறைக்கலாமென்று விசாரப்பட்டுக் கொண்டிருக்கும்போது பொழுது விடிந்துவிடிய வேயம்மட்டனெழுந்திருந்து வேலை செய்யவேண்டும் அடப்பத்தை யெடுத்துக்கொண்டு வாடியென்று கேட்டான் அவள் கதவின் பின்னே யிருந்தபடியே யொரு கத்தியையெடுத்தவன் முன்னே விட்டெறிந்தா ளவன் கோபித்துயடப்பத்தைக் கேட்டாலொரு கத்தியை விசிறி யெறிந்தாயென்று படபடப்புடனதை மறுபடியவள் முன்னே யெறிந்தான் யெறிந்தவுடனே ஐயோபாவி அநியாயமாக மூக்கையறுத்து முனையைக் குலைத்தாயே யென்றந்தக ……….. மறுபட்டமூக்கையுங் கையிலெடுத்துக் கொண்டு மிகுந்த வாககுரோஷத்தோடு தெருவிலோடி வந்து நிராபதியாயிருக்கிற வென்னை யிந்த துஷ்டன் மூக்கையறுத்தானே யிந்தவூரில்யாருங் கேட்டாரில்லையே கூகூவெனவெ யழுதாள் யிதை தூதர்கண்டு அந்த நாவிதனைப் பிடித்து கழுத்தைப் பற்றி நெற்றிக் கொண்டு நாவிதச்சியை யழைத்துக் கொண்டுபோய் ராஜாவுக் கறிவித்தார்கள் ராஜா அமட்டனைப் பார்த்து அடா இவள் மூக்கை யேனறுத்தாயென அவனொன்று முத்தரஞ் சொல்லாமல் விழித்தான் பிரகாசனிந்த துஷ்டனை கொண்டுபோய்க் கழுவிலேற்றுங்களென்று கட்டளை கொடுக்க விந்தச் சேதியையந்தப் பொருளிழந்த சந்நியாசி கேள்விப்பட்டு உடனே ராஜாவினிடத்திற் றோடிவந்து மகாராஜாவே அவன் பாராதியல்ல விவ்வாச்சரியமெல்லா நானறிவேன் எப்படியாட்டுச் சண்டையி னரி பிறந்ததோ அவ்வாறாஷாடபூபதியின் சேர்க்கையா லென்பொருள் போயிற்றோ வப்படியே யிடைச்சி சுகவாசத்தினால் இவள் மூக்கிழந்தா-ளென்றெல்லாஞ் சாங்கோபாங்கமாகச் சொல்லி யிம்மூன்றுந் தங்கடோஷமேயல்லாமல் மற்றெவரிடத்திலுமில்லையாகையா லம் பட்டனையனியாய மாய்க்கழு வேற்றுவானேனென இவையெல்லாங் கேட்டு ராஜாவிவர்களை விட்டு இடைச்சியை பிடித்து வரச்சொல்லி யவளை மூக்கறுத்தனுப்பினானென இதைகேட்டுக் கரடனிடற்கு நான் செய்யத் தக்கதென்ன என்று கேட்கத் தமனகன் யாதொன்று போயிற்றோ அதை மறுபடிச்சேகரிக்க வேண்டும் ஏது சம்பாதிக்கவில்லையோ அதைச் சம்பாதிக்க வேண்டும் எதிராக வரும் விக்கினங்களைத் தடுக்கவேண்டும் என்றிப்படியாலோசித்துப் பண்ணுகிறவனல்லவோ மந்திரி இப்போது நமக்குப் பிங்கள சஞ்சீவர்களுடைய சினேகத்தாலெலாச் சங்கடமு நேரிட்டது இவர்களுடைய நட்பைப் பிரித்தாற்றாமைக் கிவ்வளவன்னங் கிடைக்கும் என்றுசொல்ல காடகன் அந்தப் பிங்கள சீவகர்களுறவைக் கெடுக்க யாராலாகும் மணியினின்று மொளிபிரிக்கப்படுமோ இது முடியாத காரியமல்லவோ என தமனகன் என்ன சொல்லும் உபாயத்தாலாகிறது பராக்கிரமத்தாலாகுமோ ஒருகாலஞ் சொர்ணமாலையா லொருகிருஷ்ண சர்பத்தைக் கொன்றதறியாயோ என காடகன் அதெப்படிஎன ஆவலோடுகேட்கத் தமனகன் சொல்லத்துடங்கிற்று.


ஒரு பெரிய மரத்திற் கூடுகட்டிக்கொண்டு ஆணும்பெண்ணுமாகிய விரண்டு காக்கை நெடுநாள் வாழ்ந்திருக்கும்போது அந்தமரப்பொந்திலொருநாகம் வந்து சேர்ந்து அந்தக் காக்கையிடுகிற முட்டைகளை யெல்லாங்குடிக்கக்கண்டு இதற்கென்னசெய்யலாமென்று மிகவும் விசனப்பட்டுத் தனக்குச்சினேகமாகிய ந்ரியிடத்திற்போய் நடந்த சங்கதிகளைச் சொல்லி இப்போதாகிலு முட்டைகளைக் காப்பாற்றுகிற தற்கென்ன செய்யலாம் என நரி ஒருநண்டானது வெகு நண்டாசையைக் காட்டிக் கொக்கைக் கொன்றார்போல் அதை ஒரு உபாயத்தாற் கொல்லவேண்டும் என காகம் நண்டு கொக்கையெப்படிக் கொன்றது சொல்லுமையாவென நரி சொல்லுகின்றது.


மீன்களையே மிகுதியுந்தின்று வளர்த்த வொருகொக்கானது குளக்கரையில்வந்து விசனமா நின்று கொண்டிருந்தது அப்போது அதிலிருந்த மீன்கள் கொக்கைப் பார்த்து நீ உன்னாகாரத்தை விட்டுச்சும்மா விருப்பானேன் சொல் என கொக்கு நான்மீன்றின்பது மெய்தான் ஆயினுமின்றைக்கிங்கே செம்படவன் வந்தெல்லா மீன்களையும் பிடிக்க விருக்கிறதினால் என்னுடைய யிரைகளெல்லா நிர்மூலமாய்ப் போகுமேயென்றேங்கிச் சும்மாவிருக்கிறேன் என இதைக் கேட்டு மீன்களெல்லாங் கூட்டங்கூடி எவன் நமக்குபாயஞ் சொன்னானே அவனே யுபாயஞ் சொல்லுவானென்றாலோசித்துப் பிறகு கொக்கைப் பார்த்து நீயே யெங்களையிப்போதிரட்சி என கொக்கு நான் செம்படவனோடு சண்டை பண்ண சமர்த்தனல்ல மேலும் நானே கிழவன் உங்களை வேறோரிடத்திற்கு கொண்டு போவேன் அதனாலெனக்கு மிந்தத்தள்ளாமையான காலத்திற் பரோபகாரியென்கிற பெயரும்வரும் நீங்களும் வெகுகாலம் பிழைத்திருப்பீர்கள் என அப்போதந்தப்பேதைமையான மீன்களெல்லாம் பிராணனைக் காப்பாற்றும் பொருட்டுத் தன் பேச்சை நம்பி நல்லதப்படியே கொண்டு போக வேண்டும் எனக்கெஞ்ச அந்த வஞ்சனையான கொக்கு நடைக்கொவ்வொன்றாகக் குளத்திலிருக்கிற மீன்களையெல்லாம் மூக்கினால் கௌவிக் கொண்டுபோய்ச் சில மீன்களைத் தின்று மற்ற மச்சங்களை ஒரு பெரியபாரையின் மேலுலரவைத்தது பிரகு அந்த குளத்திலிருந்த ஒருநண்டு இந்தக் கொக்கைப்பார்த்து ஓசீவ காருணியனே என்னையும் மவ்விடத்திற் கொண்டு போகவேண்டும் என வேண்டிக்கொள்ள கொக்கு வருங்காலத்திலெதுவும் வலிய வருமென்றுள்ளுக்குள்ளே சந்தோஷித்து அப்படியே நண்டையுங் கவ்விக்கொண்டு போகும்போது நண்டு வழியில் மீன்கள் செத்து கிடக்கிறதையு மீன்முட்கள் சிந்திக் கிடக்கிறதையு மீன்கள் பாறையின் மேலுலருகிறதையும் பார்த்து ஐயோ பல மீன்களையுங் கொன்று நம்மையுங் கொல்ல வந்தது நம்மைக் கொல்வதற்கு முன்னமே நாமிதைக் கொல்வோமென்று ஒரு உபாயம் நினைத்துக் கொக்கைப்பார்த்து நீ யென்னை வருத்தப் பட்டெடுத்துக் கொண்டுவந்தாய் அங்கே என்னுடைய பரிவாரங்களிருக்கின்றன ஆகையாலங்கே என்னை நீ மறுபடியுங் கொண்டுபோனா லவைகளையுங் காண்பிப்பேன் என அதைக் கேட்டுக் கொக்கு பேராசைபட்டுத் திரும்பி யந்தக் குளத்திற்கு நேரேவருகையில் நண்டு கொக்கினா லந்தக் கொக்கின் கழுத்தை யிரண்டு துண்டாக நறுக்கி குளத்தில் வீழ்ந்து சுகமாய் வாழ்ந்தது


ஆகையாலந்தக் கொககைப்போலப் பாம்பையுங் கொல்ல வேண்டும் என காகம் அப்படிப் பாம்பைககொல்ல நான் செய்யவேண்டியவு பாயமென்ன என்றுகேட்க நரி இப்பட்டணத்து இராஜா குமாரத்தி குளிக்கிற மஞ்சனச் சாலைக்குப்போய் அவள் ஸ்நானமபண்ணும் போதாபரணங்கள் கழற்றி வைத்திருக்கும் அந்த ஆபரணங்களிலொன்றை யெடுத்துச் சனங்கள் பார்க்கும்படி கொண்டுவந்து மரப்பொந்திபில் போடு என்று சொல்ல காக்கை யுமப்படியே செய்ய அந்தவிராஜனுடைய வேலைக்காரர்போய் அந்த மரத்தின்பொந்தைப்பிளக்க நாகஞ்சீறி வந்து வரவே அதை இரண்டு துண்டாக நறுக்கி யெறிந்தார்கள் இப்படிக் காகத்தின் காரிய நிறைவேறிற்று ஆசையாலெல்லாமுபாயத்தாற் கைவசப்படும் எவன் புத்திமானோ அவன் பலவான் எவனுக்குப் புத்தியில்லையோ அவனுக்குப் பலமெங்கே பூர்வம் புத்திவலத்தினா லொருமுயல் சிங்கத்தைக் கொன்றதுஎன அதெப்படி என்று கரடகன் கேட்கத் தமனகன் சொல்லுகின்றது.


ஒரு நெருங்கியகாட்டின் மதோன்மத்த னென்றுஞ் சிங்கமானது அக்காட்டிலிருக்கிற மிருகங்களைமெல்லாங் கொன்று தின்றுகொழுத்து வெறிரொண்டு திரிகிறநாளில் மிருகங்களெல்லா-மொன்றாகத் திரண்டுபோய் ஓய்மிருகேந்திரா உன்னுடைய காட்டிலிருக்கிற மிருகங்களையெல்லா மிப்படி கொன்றால் மிருகங்கணிர் மூலமாய்ப்போம் ஆதலாற் றினமொவ்வொன்று மக்கிறை கொடுத்துக்கொண்டு வருகிறோம் அதை நீர் பட்சித்துக் கொண்டிருக்கலாம் என்று பிரார்த்திக்க சிங்கம் மெய்தானென்று நம்பி அப்படியே செய்கிறேன் என்று சத்தியஞ் செய்து கொடுத்தது பின் ஒவ்வொன்றாகத் தின்றுகொண்டு வருநாளில் ஒருநாளொரு கிழ முயலினுடைய முறைவந்தது அப்போது மிருகங்களெல்லாங் கூடி இன்றைக்குன்முறையோ என்றுசொல்ல முயலானது இன்றைக்கு நமக்கு மரணம் மந்தபடியா லிதற் கோருபாயம் யோசிக்க வேண்டும் புத்திமானுக்கெது தன்கை கூடாது ஆகையினா லிப்போது உபாயத்தாற் சிங்கத்தை கொல்வோமென்றாலோசித்து மெள்ள மெள்ளவந்து அந்தச்சிங்கத்தின் பசிவேளை தப்பிவரச் சிங்கம் பார்த்து முயலே யானையானாலு மென்னுடைய பசி வேளை தப்பி வருகிறதில்லையே நீயெவ்வளவு பிராணி இப்படித் தாமசமாய் வரலாமாஎன்று மிகுந்த கோபத்தோடு சையைத் தறையிலே மோதிக் கேட்க முயல் அய்யனே இதுவென் குற்றமென்று உன்னுடைய பசிவேளைக்கே வந்தேன் வந்தவழியிலோரு பொலலாத சிங்கத்தைக்கண்டு பயந்தொளித்திருந்து அந்தச் சிங்கம் போனபின்பு வந்தேனென்று சொல்லச் சிங்கம் என்னையல்லாமலிந்தக் காட்டில்வேறேசிங்கம் நீ பார்த்தாயா காட்டுவா என்றுறைக்க அழைத்துக் கொண்டுபோய்ச் சேறு நீரு மிருந்தவொரு பாழுங்கிணற்றை இதிலேயிருக்கிறதென்று காட்ட சிங்கம் முயலின் பேச்சை நம்பிக் கிணற்றை யெட்டிப் பார்த்தது அதிற்றோன்றின தன்னிழலை அந்தச் சிங்கமிங்கேயிருக்கிறதென்று நினைத்து கோபத்தோடதைக் கொல்லவேண்டுமென்ற திற் பாய்ந்து சேற்றிலழுந்தி யிருந்தது


ஆகையால்யெவன்-பத்திமானோ அவன்பலவானென்றுனக்குச் சொன்னேனென கரடகன் சிங்கத்தினிடத்திற்குச் சுகமாய்ப்போ உனக்கு மங்களமுண்டாகட்டும் எனப் பிறகு தமனக னந்தச் சிங்கந்தனித்திருக்கிற சமயம் பார்த்துப்போய்த் தண்டம் பண்ணி சுவாமி உமக்கின்றைக்கொரு பொல்லாங்கு நேரிட்டது அதை நானறிந்து கட்டளை யில்லாமல் விண்ணப்பம் பண்ணிக் கொள்ளலானேன் என சிங்கம் அதென்ன சொல் என தமனகன் உமமுடைய மித்திரனாகிய சஞ்சீவகன் உம்மிடத்தில் விசுவாசங் காண்பித்து உம்முடைய ராச்சியத்தை பிடுங்கிக்கொள்ள யோசித்திருக்கிறான் இதை நீர் பொய்யென்று நினைத்துக் கோபித்தாலும் அல்லது தண்டித்தாலும் ராஜனுக்கொரு துன்பம் வரும்போது தந் நலத்தைப் பாராமல் ராஜனுக்கு நல்லவுபாயங்களைப் போதித்துச் செய்யத்தக்க காரியங்களைச் செய்வித்தன் மந்திரிகளுக்கு நீதித் தொழிலாகையாலு மககிதைத் தெரிவித்தேன் என பிங்களன் இதைக் கேட்டாச்சரியப்பட்டுச் சும்மாவிருந்தது பின்னுந்தமனகன் நீரவனை முக்கியப் பிரதானியாகிளீர் அப்படியே-யிருக்கட்டும் எனக்கென்ன ராஜாவும் பிரதானியுஞ் சமானமாயிருந்தால் ராஜலட்சுமி இவ்விருவரிலொருவனைக் கை விடுவாள் மேலுமெப்பேதி ராஜா வொருவனையே பிரதானியாக்குகிறனோ அப்போதந்தப் பிரதானிக்குக் காரிய முண்டாகிறது அவன் சுந்தரனாயிராச்சிய வாசையால் ராஜாவைக்கொல்ல விச்சிக்கிறான் ஆகையா லிப்பட்ட மந்திரியை வேரோடுகளைய வேண்டும் இல்லாவிட்டாலவனாற் றீங்கு நேரிடும் இதைச் சொல்ல வேண்டுமா தாங்களெல்லா-மறிந்திருக்கிறீர்கள் லோகத்திற் செல்வத்தை விரும்பாதவனருமை என்றிப்படியெல்லாஞ் சொல்லக் கேட்டுச் சிங்கம் நகைத்து சஞ்சீவகனிடத்தி-லெனக்கிருககிற சிநேகம் போகாது மித்திரர்கள நேகவநியாயம் பண்ணினாலு மதைப் பிரியமாக வேநினைக்க வேண்டும் எனத் தமனகன் இதுதான்புத்திக்கு தோஷம் மிதனாலுமிக்க பாயம் வரும் ஏனென்றால் யாதொருவன் சாதுக்கள் புத்தியைக் கேளாமற் துஷ்டபுத்தியைக் கேட்கிறானோ அவன் மருந்து தின்னாத ரோகியைப் போல விபத்தையடைவான் காதுக்கினிமையாயுமிதம் பண்ணுகிறதாயு-மிருக்கிறவசனந்துல்லபம் சாதகனுடைய வசனம் செவிக்கினிமையா யிருக்குமானாலது கேட்க லாகாதென் சிங்கம் கான பயங்கொடுத்து ரட்சித்தவனெனக்கு துரோகம் பண்ணுவானா என்ன பேச்சு பேசுகிறாய் போவேன் மறுபடி தமனகன் துஷ்டர் குணமாறுமா நாயின் வாலை கணக்கெடுக்கலாமா எட்டி மரத்துக்கமுதம் வார்த்து வளர்த்தாலு மதற்கு தித்திப் புண்டாகுமா ஆகையாற்றாங்கள் சேனாமலிருக்க யிந்த விர்த்தாந்தத்தை சொன்னேன் ஏனென்றால் பிறர்க்கிதம் பண்ணுவது சாதுவுக்கும் முக்கிய தர்மம் இனிமேலென் மேற்குற்றமில்லை யாதொரு சமயத்தில் ராசா பாமரர்களுடைய புத்தியை கேட்டுச் சங்கடப்படும்போது காரியக்காரர்மேற் குற்றஞ் சுமத்துகிறானாதலால் சொன்னேனென் றிப்படிச் சொல்லிச் சும்மவிருந்தது


அப்போது சிங்கஞ் சொல்லுகிறது அதை நான் சஞ்சீவனுக்குச் சொல்லவேண்டுமென தமனகன் அவனுக்கிதைச் சொன்னாலவன் ஜாக்கிறதை பட்டு வேறோ ருபாயத்தினால் பொல்லாங்கு தேடுவான் ஆகையா விதையவனுடன் சொல்லாதிருப்பதே யோக்கியமெனென்றால் ராசாவின் மந்திராலோசனை ரவசியமாக விருக்கவேண்டுமென இதைக்கேட்டு மறுபடி சிங்கம் அந்த சஞ்சீவகன் விரோதப்பட் டென்ன செய்ய மாட்டு வானனவன் சாமர்த்திய மெவ்வளவென்று சொல்லநறியவனை நாமறிய மாட்டோம் அவன் பராக்கிரமுஞ் சுபாவமு நமக்கெப்படித் தெரியும் ஒருவன் குணத்தை யறியாமற் சேர்க்க லாகாது சேர்த்தாலொரு சீலைப்பேன் மூட்டுப் பூச்சியைச் சேர்த்து நாசமடைந்தது போலாகுமென சிங்கம் அதெப்படிச் சொல்லுமென தமனகன் சொல்லுகிறது.


ஒரு ராசாவின் பஞ்சனையின் மந்த விசர்ப்பணி யென்னுமொரு சீலைப்பேன் நெடுநாளாக வாசம் பண்ணிக்கொண்டிருக்கையி லொரு நாளிதன் வீட்டுக்கு டிண்டிபனென்று மூட்டுப்பூச்சி வந்தது அதைப் பார்த்துச் சீலைப்பேன் அப்பா நீ பொல்லாதவன் முட்களைப் போன்ற பற்களினாலே தூங்குதற்கு முன்னமே துடுக்காய் கடிப்பாய் நீ சமயந் தெரியாதவனாதலால் நீ ராஜசயனத்திலிருக்கத் தக்கவனல்ல இவ்விடம் விட்டோடிப்போவென்று கடுகடுத்துச் சொல்ல மூடுநானப்படிச் செய்யவில்லை நீசொன்னபடியே கேட்பேனென்று காலில் விழுந்து பிறார்த்திக்க சீலைப்பேன் மனதிரங்கில நல்லது நீ வெடுக்கென்று கடியமல் நித்திரை செய்யப்பார்த்து மெற்றெனக் கடித்துக் கொஞ்ச ரத்தங் குடித்திருஎன்று சொல்ல அப்போதந்த மூட்டுப்பூச்சி நல்லதென்றிருந்து பிரகு ராசா விழித்திருக்கும்போதே சுறுக்கென்று கடிக்க ராஜன்றிடுக்-கென்றெழுந்திருந்தென்னமோ கடித்ததென்று சோதனைக்காருடனே சொல்ல அவர்கள் விளக்குக் கொண்டு சோதிக்க முகடு சீக்கிரமாய் கட்டிற் சந்திலொளிந்துக் கொண்டது யதற்கிடங் கொடுத்த சீலைப்பேனகப் பட்டது நீயல்லவா வெங்களி ராஜனைக் கடித்தாயென்று நசுக்கி கொன்றார்கள். ஐயோ வகை தெரியாமலிருந்த்து ஆகையாலொருவன் குணத்தை தெரிகிறதற்கு முன்னே யவனுடனே சகலாசம் பண்ணலாகாதெனக் கேட்டுச் சிங்கம் அந்த சஞ்சீவகனுடைய துஷ்டசுபாவமின்ன எப்படியென்றமக்குத் தெரிந்தாலப்போது நிஜமென்று சொல்ல தமனகன் அந்தவெருது உம்மைக் கொல்ல நினைத்து தன் கொம்புகளை முன்னிட்டுக்கொண்டு உம்முடைய சந்நிதியில் வரும்போது தங்களுக்குத் தெரியவருமென்று சொல்லிவிட்டு எருதினிடத்திற்குப் போயங்கே தன் மனதில் மிகவும் விசனமிருக்கிறதாகத் தோற்றுவித்தது யப்போது சஞ்சீவன் மித்திரா சுகமா வென்றுகேட்க தமனகன் சேவகனுக்குச் சுகமெங்கே யிருந்து வரும் சம்பத்தும் விபத்துங் கூடவேயிருக்கின்றன ராசாவுக்குப் பிரியமாயாரிருக்கிறார்கள் யாசகன் சன்மானத்தை யடைவானா ஆகையா லிந்தக் காலமே தனக்கு மித்திரன்யார் தன்வலி யெவ்வளவென் றெப்போதும் விசாரித்துக் கொண்டிருக்க வேண்டுமென இதைக் கேட்டு சஞ்சீவகன் அப்படி ஏன்சொல்லுகிறாயென தமனகன் ராசகாரியத்தி லுண்டாகிய லஞ்சகத்தை மற்றொருவரோடு சொல்லலாமோ ராசா வறிந்தாற் சொல்லுவான் ஆனாலு என்னம்பிக்கையாலே சிங்கத்தோடேசினே கம்பண்ணினதினால் யுனக்குச் சொல்லுகிறேன் அதென்னவென்றால் அந்தச் சிங்கமுன்னமே மிகவும்கோபமா யுன்னைக்கொன்று தன்னுடைய சேனைகெல்லாம் நல்ல விருந்திடநினைக்கிற தென்று சொல்ல அதைக் கேட்டவுடனே சஞ்சீவகன் வருத்தத்தோடு மாலோசித்துக் கொண்டிருந்தது தமனகன் வேறே யாலோசனை என்ன யாதொன்று சம்பவித்ததோவதற்கு தக்கதாக நடக்கவேண்டுமென சஞ்சீவகன் நீ சொன்னதெல்லஞ் சரிதான் உலகத்திலுமப்படியே யிருக்கிறது எப்படி என்றால் சாதரணமாய் ஸ்திரீகள் துர்சன்ர்களுக்கு வசமாயிருக்கிறார் ராசாக்கள் துஷ்டர்களைப் பரிபாலிக்கிறார்கள் துஷ்டனுடனே மிகவுஞ் சினேகித்தாலவன் விபரீதமாக நினைக்கிறான் ஏனென்றால்குருடனுக்கு கண்ணாடியை காண்பித்தாலும் செவிடன் காதிலுபதேசித்தாலும் அவர்கள் விபரீதமாகவே நினைப்பார்களாகையால் துஷ்டனப்படி விபரீதமாக நினைக்கிறான் எப்படிச் சந்தனமரம் பாம்போடு கூடியிருக்குமோ எவ்வாறு தாழை முள்ளுக்களோடு கூடியிருக்குமோ வப்படி பெரும்பாலும் ராசாக்கள் துஷ்டர்களாற் சூழப் பட்டிருக்கிறார்கள் ஆகையாலிப்படிப்பட்ட பொல்லாங்கு நமக்கு நேரிட்டதென இதைக்கேட்டுத் தமனக னந்தச் சிங்கத்து வாய் பேச்சு மாத்திரந் தித்திப்பேயல்லாமல் மனமிகவுங் கடூரந்தான் பூர்வப் பிர்மா கடலைக் கடக்கிறதற்கு கப்பலுண்டாக்கினானிருட்டை போக்கடிக்க விளக்கை சிருட்டித்தான் யானையை-யடக்க வங்குச நிருமித்தான் ஆனால்

துஷ்டர்களுடைய மனதடங்கும்படி யாதொன்றுஞ் செய்யாமற் போனானென வினவ எல்லங் கேட்டுச் சஞ்சீவகன் பெருமூச்செறிந்து சொல்லுகிறது பெரிய பொல்லாங்கெனக்கு நேரிட்டதைத் தப்பித்துக் கொள்ளவெனக்கு சாமர்த்தியமில்லை எமனுடைய கையிலகப்பட்டவனெப் படித்தப்பிப் போவான் எப்படியொரு குற்றமில்லாதவொட்டையை காகமுதலானவை கூடி கொலை செய்தனவோ எப்படி வஞ்சனை பண்ணுகிற துஷ்டர்களொருவனிடத்திற் குற்றமில்லாமலே கொலை செய்கிறார்களென தமனகதெப்படியண்ணே சொல்லவேண்டுமென சஞ்சீவகன் சொல்லுகிறது


ஒருகாட்டின் மகோற்கடனென்கிற வொருசிங்கம் நரியையும் புலியையுங் காதகையையுந் தனக்கு மந்திரியாக வைத்துக்கொண்டரசாளுகிற நாளில் ஒருநாளந்தக் காட்டில் ஒட்டகமொன்று வழிதப்பி வரக்கண்டு மந்திரியாகிய காக்கை நீ யாரெனக் கேட்க வந்த ஒட்டகம் நான் வழிதப்பி வந்து விட்டேனெனச் சொல்ல அதையிட்டுக் கொண்டுபோய் சிங்கத்தினிடத்தில் விட்டு நடந்த காரியத்தைச் சொல்ல வந்த சிங்கங்கேட்டு பயப்படாதே நம்முடைய மந்திரிகளுடனே நீயுமொரு மந்திரியாயிருமென்ற பயாஸ்தங்கொடுத்து மந்தானகனென்று பெயரிட்டதை தன்னிடத்தில் வைத்துக்கொண்டது இப்படி வெகுகாலஞ் செல்லுகைகை-யிலொருநாள் சிங்கத்துக்குச் சரீரம் அசுத்தமா யிருந்தபடி யினாலம் முறையு-மழைப்பித்திறைக்கென்னா லிறை சம்பாதிங்கக் கூடாதாகையால் நீங்கள் போய் எனக்கே தாவதிறை கொண்டுவர வேண்டும் பிறகுநான் தின்று மிகுந்ததை நீங்கள் தின்னலாமென இம் மூன்றும் சிங்கத்தின் கட்டளைப்படியந்தக் காட்டிற் போயிரை தேடிப்பார்த் தகப்பாடாமையா லப்போது தங்களோடு கூடவிருந்த மந்தானகனை தூரத்திற் போம்படி யொலை வேலையிட்டுக் காக மற்றவிருவரையும் பார்த் தின்றைக்கு நாம் மந்தானகனை கொல்லுவோம் புல்லுந்தழையுந் தின்கிறவனா நமக்குப் பிரயோசன மென்னவென மற்றிரண்டுஞ் சரிதானா னாலவனுக்கு நம்முடைய ராசாவபயங் கொடுத்திருக்கிற தினா லவனை நாமெப் படிக்கெல்லாங் கூடாதென காகம் ஆனாலு மின்றைக்கு சிங்கத்தின் கையாற்றப்பாமல் மரணமடைவோம் ஏனென்றாற் பசியெடுத்தால் தாயும் பிள்ளையை விட்டுவிடுகிறாள் பாம்பு தானிட்ட முட்டைகளைக் குடிக்கிறது ஆகையாற் பசியாற் பீடிக்கபடுகிறவனெந்தப் பாதகந்தான் பண்ணமாட்டானிது வுங்களுக்குத் தெரியவில்லையா வென்று சொல்லியுடனே சிங்கத்தண்டை போய்க் காகஞ் சொல்லுகிறது சுவாமியின்றைக் கெதுவுங் கிடைக்கவில்லை என ஆனாலிதற் கென்ன உபாயம் பண்ணலாமெனச் சிங்கங் கேட்க காகம் தாங்கள் சுவாதீனத்திறை யிருக்கையில் வேறே-யாலோசிப்பானேன் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் தேடலாமாவென சிங்கம் என்னிடத் தாகார மெங்கேயிருக்கிறதென காகம் மந்தானகமென்னு மொட்டையிருக்கின்றதே என இதைக்கேட்டு சிங்கம் பூமியை கையாற் றொட்டுச் சிவா சிவாவெனக் காதின் மேற்கையை வைத்து நானவனுக்கபயங்கொடுத்திருக்கையில் நீங்களிப்படி விபரீதவார்த்தை சொல்லலாமா அடைக்கலம் புகுந்தவர்களைக் கைவிடலாமா பசு பூமிதானிமிவற்றின்றானத்தைக் காட்டிலு மிந்தப் புண்ணிய மதிகமென்று சாஸ்திரமிருக்கிறதே எனக்கேட்டு ஐயா காகம் என்னொரு விண்ணப்பத்தை கேட்டருளும் ஒரு குளத்துக்காக ஒருவனை விட்டுவிடலாமா ஒருகிறாம ரட்சணைக்காக ஒரு குடுமபத்தை துரக்கலாமா ஒருதேச பாலனத்தின் பொருட்டு ஒரு கிராமத்தைவிடலாந்தன்னி மித்தம் பூமியை விடலாம் ஆகையாலிதுதப்பென்றாகிலு மவனைத் தாங்கள் கொல்ல வேண்டாம் நாங்களே கொல்லுவோம் இல்லாவிட்டா லவனேசாவவுடன்பட்டு என்னைக் கொல்லுங்களென்பான் அப்போது நாங்கள் கொல்வோமென்று காகஞ்சொல்ல சிங்கஞ் சும்மாவிருந்தது பிறகு காகம் அதையே கட்டளையாக நினைத்துக் கொண்டுபோய் மற்றயிரண்டையும் மிட்டுக்கொண்டு சிங்கத்தின் கிட்டவந்து சுவாமி யின்றைக்கு ஒன்றும் ஆகாரமகப் படவில்லை அதனாலுங்களுக்கு இன்றைக்கு பட்டினியிருக்கலாச்சுதே அப்படியிராமலென்னைப் பொசிக்கலாமென நீ எவ்வளவு உன்னை யுண்டதினாலென் பசி தீருமா உன்னுடல் என் கடவாய்ப்பல்லுக்குப் போதுமா வென்று கேட்க நரியப்படியானால் என்னைத் தின்னென்று நிற்க நீயுமப்படிதான் நீயதிகமல்லவென்று மறுக்க புலி இவ்விருவரிலுனான் பெருத்திருக்கிறதினா லென்னைப் பட்சித்துப் பசி தீருமெனச் சிங்கம் நீதானெனக்கு எவ்வளவிறை உன்னைபெரிதாக நினைத்துக் கொண்டிருக்கின்றையோ வென்று சொல்ல ஒட்டகமிதைப் பார்த்துச் சுவாமி நானல்லாரைக் காட்டிலும் பெருத்திருக்கவில்லையா சித்தமானாலென்னைக் கொல்லாமென-விதைக் கேட்டவுடனே புலியும் நரியுமாய் விழுந்து அந்தட்சனமே ஐயோ அதைக் கொன்றெல்லாம் புசித்தன ஆகையாலெங்கே மிகவுங் கீழ்களிருக்குமோ வங்கே சுகமிராது பிராணனுக்கு நாசம் வருமென்றே நினைக்க வேண்டும் இவ்விடத்திலுமப்படியே யிருக்கிறது ஆனாற்றுஷ்டர் கையிலகப்பட்டுச் சும்மாவிருக்கிறதை காட்டிலுஞ் சண்டைசெய்வதே யோக்கியம் ஏனென்றால் சண்டை முனையிற் செத்தால் சொர்க்கமடைகிறான் சத்துருவை செயித்தால் இறாச்சி-யமடைகிறானாதலால் சூரர்களுக்குச் சாவும் பிழைப்புஞ் சமானமென்றது அதைக் கேட்டுத் தமனகன் சொல்கிறது பகைவர்களுடைய பராக்கிரமத்தை தெரியாமலெவன் பகைத்துக் கொள்ளுகிறானோ யவன்மூத்திரஞ் சிட்டுக் குருவியினா லெப்படி-யவமானமடைந்ததோ அப்படியவமான மடைவானென அப்போது தம்பி அதெப்படியென்று சஞ்சீவகன் கேட்கத் தமனகன் சொல்லுகின்றது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE


சமுத்திரக்கரையி லிரண்டு கிட்டுகளாணும் பெண்ணுமா யொரு செடியின்கீழ் கூடு கட்டிக் கொண்டிருக்கும்போது பெட்டை ஆண் பறவையைப் பார்த்து எங்கே முட்டையிடலாமென்று கேட்க ஆணிதுவே நல்லவிடமென்று சொல்ல பெண் இந்தக் கடற்கரையி லொருவேளை யபாய நேரிடுமென ஆண்சிட்டு சமுத்திரத்திற் என்னுடனே பகைத்துக் கொள்ள சாமர்த்தியமில்லையென உனக்குஞ் சமுத்திரத்திற்கும் வெகுதார தம்மியமிருக்கின்றதே எவன்றன் வலியும் பிறன்வலியும் பார்க்கிறதில்லையோ அவன் விபத்தையடைவான் எவன் பார்க்கிறானோ அவன் சுகமடைவான் மேலுந் தனக்கிதம்பண்ணுகிற மித்திரன் பேச்சைக் கேளாதனாமை வபப்டிக் கழியைவிட்டு மரணமடைந்ததோ அப்படியே மரணமடைவானென ஆண் அதெப்படி பெண்ணே சொல்லடியென பெட்டைக் குருவி சொல்லுகிறது.


விகடசங்கடமென்னு மிரண்டன்னமுங் கம்புக்கிரவனென்னு மாமையும் சினேகமாயொரு குளத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கையில் அன்னங்கள்யிப் போதிக்கிங்கே மழை பெய்யாமையாற் குளம் வற்றிபோமாகையால் இனி வேறொரு குளத்திற்போய் சேர்வது யோக்கியமென்று நினைத்தது ஆனாலிதை நம்முடைய சினேகனுக்குஞ் சொல்லவேண்டு மென்றாலோசித்து அப்படியே யதற்கு சொல்லும் போது கம்புக்கிரீவன் நீங்கள் செப்படையினாற் பறந்து போவீர்கள் நான்வேறோ ரிடத்திற் கெப்படி வருவேனென விகட சங்கடர்கள் ஆனாலெங்கள் வார்த்தையின் நம்பிக்கை வைத்து ஸ்திரமாயிருப்பாயானால் உன்னையுங் கொண்டு போகிறோம் கொண்டு போகையில் வழியிலொன்றும் பேசாமலிருந்தாற் போகக் கூடுமென்று சொல்லி ஒரு கழி கொண்டுவந் தாமையைப் பார்த்திந்தக் கழுயைப் பல்லினாலே பலமாய் கடித்துப் பிடித்துக்கொள்ளு விட்டு விடாதே நாங்களிருவருமிதை யிருபுரத்திலும் மூக்காற் கவ்விக்கொண்டு ஆகாச மார்க்கத்திற் போகிறோமென்று சொல்லி அந்த கொம்பையிரண்டும் பற்றிக்கொண்டெழும்பி பரந்து போகையில் இதையொரு பட்டணத்து சனங்கள் பார்த்ததிசயித்து நகைத்தெல்லோருமிருக்க ஆயிதென்ன இரண்டு பறவைகளொரு கழியைத் தூக்கிக் கொண்டதை யாமையினாற் பிடிபிடித்துக் கொண்டதை கொண்டு போகின்றனவென் றிப்படி பேரிரைச்சலிட்டு பேசினார்கள் அதைக் கேட்டு சம்புக்கிரீவ னிந்தவிறைச்ச லெங்கிருந்துண்டாகிறதென்று சொல்வதற்கு வாய் திறந்தவுடனே கழியினின்று விடுபட்டுப் பூமிமேல் விழுந்தது அப்போதங்கேயிருந்த புலாற்றின்பவர்களுடனே கொன்று தின்றார்கள் ஆகையாற்றனக்கிதம் பண்ணுகிறவர்கள் பேச்சை யசட்டை பண்ணலாகாது மேலும் யாதொருகாரிய நேரிடுவதற்கு முன்னே யாலோசிக்கிறவனும், வருகிறபோதே யாராய்கிறவனும் மிவ்வருவருஞ் சுகமடைவார்களிதை விட்டியாதொன்று வரத்தக்கதோ அது வரட்டுமென்று யார் சொல்லுகிறானோ அவன் வந்தபின் காப்போமென்னு மீனைப்போல் நாசமடைவான் என சேவல் அதெப்படியென பெட்டை சிட்டு சொல்லுகின்றது.


ஒருபெரிய குளத்தில் வருமுன்காப்போனென்றும் வருங்காற் காப்பவனென்றும் வந்தபின் காப்பவனென்றும் மூன்று மீன்களநேக நாளாய் வாழ்ந்துக் கொண்டிருக்கு நாளிலொரு நாள் வலைக்காரர் வந்ததிலே தண்ணீர் கொஞ்சமாயிருக்கிற-தாகையால் நாளை வந்திதிலிருக்கிற மீன்களையெல்லாம் பிடிப்போமென்றுபேசிக் கொண்டதை வருமுன் காப்பவன்கேட்டு தன் சினேகிதரிடத்திற்போய் நாமிவ்விடம் விட்டுச் சீக்கிரமாகப் புறப்பட வேண்டும் இனியிங்கே யொருநிமிஷ நேரமும் இருக்கலாகாதென இதைக் கேட்டு வருங்காற்பவன் சொல்லுகிறது நமக்கு விபத்து வரும்போது பார்த்துக் கொள்ளுவோம் காரியம் நேரிடும்போது அதற்குத் தக்கதாகப் புத்தியுண்டாகுமெனப் பிறகு வந்தபின் காப்பவன் றன்னிடத்தை விட்டுவிடுகிறது தான் மூர்க்கத்தனம் ஏனென்றால் எது வரத்தக்கதோ அது வரவே வரும் யாதொன்றும் வரத் தக்காததோ அதை நாம் வருந்தியழைத்தாலும் வராது ஆகலால் நான் வரமாட்டேனென்று சொல்லி யந்தக் குளத்திலேயே யிருந்தது பிறகு வருமுன் காப்பவன் வேறோரிடத்திற்குப் போய்விட்டது மறு நாளுதயத்திற் செம்படவர் வந்து மீன்களைப் பிடித்தார்கள்


அப்போததில் வருங்காற்காப்பவனகப்பட்டுச் செத்தாற் போற் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தது அதைப்பார்த்து இது செத்ததென்றெண்ணிக் கொண்டு செம்படவனதைத் தறைமேற் போட்டு வைத்தானிதற்குள்ளே பதுவவன் கண்ணுக்குத் தப்பி தண்ணீரிற் போயொளித்துக் கொண்டது பிறகு வந்த பின்காப்பவன் வலைக்குளகப்பட்டிப்போதென்ன செய்யலாமென் றங்குமிங்குமோடுவதை செம்படவன் கண்டு தடியாலடித்துக் கொன்றான் மற்றிரண்டுஞ் சுகமடைந்தன ஆகைய-லெதையுமாலோசித்துச் செய்யவேண்டுமென்று சொல்லி பிறகு புருஷன் சொற்படியங்கே தானே முட்டையிட்டது அப்போது சமுத்திரம் தன் வல்லமையை அறியாமல் முட்டைகளை யடித்துக்கொண்டு போயிற்று


சிட்டு அதைப் பார்த்து வெகு துக்கமாய்ச் சேவலுடனே சொல்லுகிறது சுவாமிதங்களுக்குப்பெரியசங்கடம்வந்தது ஏனென்றால் முட்டைகளை சமுத்திரங் கொண்டுபோயிற்று இப்போதென்ன செய்யலாமென சேவல் நீ பயப்படாதே நான் முட்டையைக்கொண்டு வருவேனென்றிராணியைப் பாரென்று சொல்லி எல்லாப் பறவைகளையுங் கூட்டமாய்க் கூட்டிக்கொண்டு கருடனைச் சரணமடைந்து கருடனதை விஷ்ணுவுக் கறிவித்தப் பறவை மிகவும் வருத்தப்படுகிறதாகையா லிதன் முட்டைகளைக் கொடுப்பிக்க வேண்டுமென விஷ்ணு சமுத்திரத்தைப் பார்த்திகன் முட்டைகளைச் சீக்கிரமாய்க் கொடுவென்று கட்டளை யிட்டவுடனே சமுத்திரம் முட்டைகளைக் கொண்டுவந்து கொடுத்தது


ஆகையாற் சத்துருக்களுடைய பராக்கிரம-மறியாமற் பகைத்துக் கொள்ளலாகாது ஆனாலது வந்த சிங்கத்திற்- ககங்காரத்தினால் தெரியவில்லையென கேட்டு சஞ்சீவகன் தமனைப் பார்த்து நல்லது அந்தச் சிங்கத்தின் சண்டைக் குறிப்பெப்படியிருக்குஞ் சொல்லென தமனகன் எப்போதவன் சாதுகளை நெறித்துக்கொண்டு வாலைத் தூக்குவானோவப்போது கொல்ல நினைத்தானென்றறிய வேண்டும் அக்காலத்திலப்படியே நீ யுமவனுக்கு முன்னேயிருக்க வேண்டுஞ் சுத்த வீரனாகியவுனக்குத் தெரியாதா எல்லாந் தெரிந்தவர்கட்குச் சொல்லலாலேனெனச் சொல்லிவிட்டு தமனகன் மறுபடி கரடகனிடத்திற் போயிற்று அப்போது கரடகன் என்னமாச்சுது சொல்லென தமனகன் காரிய முடிந்தது இருவருடைய சினேகத்தின் வாயில் மண்விழுந்தது இப்போது நான் சிங்கத்தின் கோபக்குரியிப்-படியிருக்குமென்று சஞீவனுக்குச் சொன்னபடியே செய்விக்கிறேனென்று பிங்களனிடத்திற்குப் போயப்படியே யதை செய்வித்தது பிறகு சஞ்சீவகன் சிங்கமிருக்கு-மிடத்திற்குவந்து பார்க்கும்போது முன்றனக்குத் தமனகன் சொன்னபடியே யிருக்கக்கண்டு மிகவும் விசனமடைந்து பராக்கிரமத்தினாலேயே பிராணனை விடவேண்டுமென்று நிச்சயித்து யுத்தத்துக்காரம்பிக்கவே யிரண்டுக்கும் பெரிய சண்டை விளைந்தது கரடகனதைப் பார்த்து தமனகாதுஷ்டா உன் சேர்க்கையால் ராஜாவுக்குஞ் சினேகனுக்குஞ்ச ண்டையுண்டாயிற்று ராச நீதியில் சமா தான பேத தண்டமென்று நான்குபாயங்களிருக்கின்றன அவைகளிற் சாமமென்னுமு பாயமுக்கியமானது ஏனென்றால் அதனாற்காரிய சித்தியுண்டாயிருப்போம் மற்றவைகளாலுண்டாகாது பகையிருந்தாலுஞ் சாமவுபாயத்தினாலேயே போமிப்படியிருக்கையில் நீ ராசாவை பெரிய பொல்லப்பில் விழுவித்தாய் ராசாக்களிற் சிலரீனர்களுடைய புத்தியைக் கேட்டு சங்கடமடைகிறார்கள் ஆகையாற் குணவந்தர்களுடையகூட்டுரவு ராசாக்களுக் கிருக்கவேண்டும்கபடியாயிருக்கிற பிரதானி புத்திசாலியானாலும் அவனொருபோதும் ராசாவண்டை யிலிருக்கலாகாது.


மற்றுந் தாங்களே சம்பத்தையடைய வேண்டுமென்று நினைத்து ராசாவினிடத்தில் வேறொருவன் சேரலாகாதென்றிச் சிக்கிரவனும் ராசாவுக்கு யோககியர்காள் ஏனென்றால் பலபெயர் சமர்த்தர்கள் ராசாவினிடத்திலிருந்தால் ராசா பிரகாசிப்பான் ஆசைக்காரனுந் துஷ்டனுமாகியவிவர்களுடைய கூட்டுறவால் ராசா பிரகாசிக்கமாட்டான் தங்களைவிட ராசாவிடத்தில் வேறொருவனிருக்கலாகாதென்று யரசிறுக்கிறானோ அவனை ராசாவுக்குச் சத்துருவென்று நினைக்க வேண்டும் அப்படியே நீயிந்த தீங்கு விளவித்தாய் எசமானுடைய தயைகிடைத்தாற் சேவகர்கள் காலியாகாமல் மிகவுமடக்கமா யிருக்கவேண்டும் நீயதை விட்டு விபரீதமாக நடக்கிறாய் பிதாவைப் போலிருப்பான் புத்திரனென்பதை நீ பொய்யாக்கினாயிப் போதுனக்கு நானென் சொல்வேன் கொக்கு குரங்குக்குபதேசம் பண்ணி எப்படியிறந்ததோ வப்படி யுன்னாலே மரணமடைவே னென்றெனக்குத் தோற்றுகிறதென் றிப்படி கரடகன் சொன்னதை கேட்டுத் தமனகன தெப்படி சொல்லெனக் கரடகன் சொல்லுகிறது.


ஒருநாள் குளிரால் வருத்தப்படுகிற குரங்குக் கூட்ட மின்னாம்பூச்சிகளை பார்த்து இதுநெருப்பென்று நினைத்துக் குளிர் காய்வதற்காக அதனருகே போயிற்று அப்போதங்கே யொரு மரத்தின் மேலிருந்த சுமுகனென்னுமொரு பறவை யிதைப் பார்த்து குரங்கினருகே வந்து இது மின்மினிப்பூச்சி நெருப்பென்றென்று சொன்னவுடனே யந்தக் குரங்குக் கூட்டத்திலொன்று கோபமாயந்தப் பட்சியை பிடித்தெனக்கு நீ புத்தி சொல்லுகிறவனாவென்று கல்லிலறைந்துக் கொன்றது ஆகையால் துஷ்டர்களுக்கு உபதேசம் பண்ணலாகாதென்று கரடகன் சொல்ல தமனக னொன்றும பேசாமல் மௌனமாயிருந்து மனதில் மிகவும் விசனப்பட்டு நானிந்தப் பாதகம் பண்ணினேனென்று சொல்ல மறுபடியுங் கரடகன் சொல்லுகிறது. அடா மதனகா இப்படி கொத்த நடத்தையினால் துஷ்ட புத்தியைப்போல் நீயு நாசமடைவா யென அப்போது துஷ்டபுத்தி யெப்படி கெட்டான் சொல்லெனக் கரடகன் சொல்லத் தொடங்கினது.


துஷ்டபுத்தி சுபுத்தியென்று இரண்டு செட்டிப் பிள்ளைகள் பணஞ் சம்பாதிகிறதற்காகத் தேசாந்திரம் போனார்களவ்விடத்திற் சுபுத்திக்குப் பூமியிலொரு பணப்புதை யகப்பட்டது. அதைச் சினேகத்தினாலே துஷ்ட புத்தியுடனே சொல்லத் துஷ்டபுத்தி யந்ததிரவியத்தை யிங்கேயே புதைத்துவிட்டு கொஞ்சம் பணமெடுத்து கொண்டு போவோமென சுபுத்தி சினேகத்தினா லதற்குச் சம்மதித்துப் பிறகு அதிற்கொஞ்சம் பணமெடுத்து கொண்டு மற்றப் பணத்தை ஒரு மரத்தடியிற் பள்ளந் தோண்டி அதில் புதைத்து வைத்துப் பின்பு வீட்டுக்குப் போய் பழையபடியே சினேகமாயிருக்கையி லொரு நாள் துஷ்டபுத்தி தனியே போயந்தப் பொருளையெல்லா மெடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.


பிறகு சில நாள் கழித்து துஷ்டபுத்தியைப் பார்த்து அந்த நம்முடைய திரவியத்தைக் கொண்டு வருவோமெனப் பின் பிருவரும் போயந்த விடத்திற் பார்க்குமளவி லங்கொன்று மில்லாமையாற் துஷ்டபுத்தி மிகவும் வருத்தத்தோடு சுபுத்தியைப் பார்த்திங் கிருந்த பணத்தை நீயே கொண்டுபோய் மேலுங்கபடமாக வருத்தப்படுகிறா யென்று சொல்லி கலகப் பட்டிதை ராசாவுக் கறிவித்தால் பிறகி ராசா நியாயாதிபதியை யழைப்பித்து பஞ்சாயத்திற்றிற்க வேண்டுமெனக் கட்டளையிட ஐந்து நாளைக்குள்ளே தீர்த்துப் போடுகிறேனென்று ராசாவுக்கு கெடுவுவைத்துக்கொண்டு பஞ்சாயத்திற் காரம்பித்தானப்போது துஷ்ட புத்தி எனக்குச் சாட்சியிருக்கிற தந்த சாட்சியை யிப்போதே கேட்கலாமென் பஞ்சாயத்தாருஞ் சாட்சியைக் கொண்டுவா வென பின்பு துஷ்டபுத்தி வீட்டுக்குப்போய் தன் தகப்பனுடனே சொல்லுகிறான் உன்னுடைய ஒரு பேச்சா லெனக்குப் பதினாயிரம் வராகன் கிடைக்குமென அப்போது கிழவனெப்படி கிடைக்குஞ் சொல்லென துஷ்டபுத்தி நீர் மரப்பொந்திலி ராத்திரிக்குப் போயுட்கார்ந்திருக்க வேண்டுமங்கே நியாயாதிபதி முதலானோர் வந்திங்கிருந்த பணத்தை யார்கொண்டு போனார்களென்னும் போது நீர் சுபுத்தி கொண்டு போனானென்றாலென் காரியமாகுமென இதைக்கேட்டு பிதா சொல்லுகிறான் பொல்லாங்கு நேரிடுகிற காரியத்தை பண்ணிச் சுகமடைய வேண்டுமென்றிச் சிக்கிறது கொக்கைக்போல மூடத்தனமாயிருக்கிறதென துஷ்டபுத்திய தெப்படியென பிதா சொல்லுகிறார்.


தான்பொரிக்கிற குஞ்சுகளை யெல்லாமொரு பாம்பு தின்ன பறி கொடுத்துக்கொண்டு வருகிற ஒருமூட கொக்கு எப்போதுபொரித்த தன்குஞ்சுகளைக் காப்பாற்றுகிறகைக் குறுக்கென்ன செய்யலாமென்று பெண்கொக்கோடுகூட ஏரிக்கரையி லுட்கார்ந்து ஆலோசித்துக் கொண்டிருக்கையில் அக்கொக்கின் சினேகி்தனாகிய குளிரனென்னும் பெயரையுடைய நண்டானது கொக்குகளளைப் பார்த்தின்றைக் கேன் நீங்கள் வியாகூலமா யிருக்கிரீர்களென அவர்கள் தங்கள் விர்த்தாந்த மெல்லாஞ் சொல்லக் குளிரனதைக் கேட்டு ஆண்கொக்கைப் பார்த்து நல்லதுனக்குப் பாம்பைக் கொல்லுகிற வுபாயமொன்று சொல்லுகிறேன் ஏனென்றால் கீரிப்பிள்ளையின் வளை முதற்கொண்டு பாம்பிருக்கு மிடமட்டு மீன்களை யிறைத்து வைத்தாற் காரிய சித்தியாகுமென்றது பிறகு கொக்கு அப்படியே செய்யக் கீரிப்பிள்ளைகள் வளையிணின்றும் புறப்பட்டு மீன்களைத் தின்று கொண்டேபோய் பாம்பையுங்கடித் தெரிந்துவிட்டுக் கொக்கின் குஞ்சுகளையுஞ் சாப்பிட்டது ஆகையாலிப்படிப்பட்ட வாலோசனை பண்ண லாகாதென்று துஷ்டபுத்தி பிதா சொன்னதைக் கேளாமலவணை வலுவிலிழுத்துக்-கொண்டு வந்து மரப்பொந்தி லுட்கார வைத்து விடியற் காலத்தில் நியாயாதிபதி முதனாகிய பேரையுஞ் சுபத்தி முதலானோரையு மவ்விடத்திற்கிட்டுக் கொண்டு சாட்சியிந்த மரத்தை கேளுங்களென்றானப் போதந்த பணமுழுதுஞ் சுபுத்தியே கொண்டு போனானென்றொரு சத்தம் பிறப்பட்டது அப்போது சுபுத்தி இதென்ன மோசமாயிருக்கிறது இங்கேயொரு பிராணி யில்லா மற்றொனி யெங்கேயிருந்து புறப்பட்டது இது தெய்வீகமாயிருந்தால் மெய்யல்லவோ சொல்ல வேண்டுமென்றிப்படித் தனக்குள்ளெண்ணமிட்டுக் கொண்டந்த மரத்தின் மேலேறி சோதிக்கையி லதில் ஒருபொந்து காணப்பட்டது உடனேயிங்கே கிருத்தியமிருக்கு மென்றெண்ணி யங்கே நெருப்பை மூட்டி பற்றுவித்தான் பின்பு உள்ளேயிருந்த கிழவன் பாதிவேகிற மட்டும் பல்லைக் கடித்து கொண்டிருந்து பொறுக்கப் போகாமலலறிகொண்டு வெளியே வந்து விழுந்தான் அப்போதங்கியிருந்தெல்லோரு மிதென்ன விதமென்ன வெனக் கேட்க கிழவன் பிள்ளை துஷ்டபுத்தி கபடத்தினால் என்னைப் பலாத்காரமாக கொண்டு வந்திங்கே வைத்தானென்று சொல்லி யிறந்துபோனான் நியாயாதிபதி வாயினாலே ராசாவெல்லா மறிந்து கொண்டவனைக் கழுவிலேற்றினா னென்று சொல்லிப்பின்னுங் கரடகன் மதனகனைப் பார்த்துப் பாம்பை வெகுநாள் வளர்த்தாலும் அது எப்படியும் வளர்த்தவனைக் கடிக்கும் ஆசையாலெனக்கு உன்னிடத்தில் பயந் தோன்றுகிறது இனிமேலுன்னிடத்திற் தேவ தத்தனைப்போல் நடந்து கொள்ள வேண்டுமென்ன அதைக் கேட்டுத் தமனகன் தேவதத்தனெப்படி நடந்துக் கொண்டான் சொல்லெனக் கரடகன் சொல்லுகிறது.


ஒருபட்டணத்தில் தேவதத்தனென்னுமொரூ சாவகாரிதன் றிரவிய வீண்ணாய்ப் போனதினால் மறுபடி திரவியமுஞ் சம்பாதிக்க நினைத்து தேசாந்திரம் போகப் புறப்படும்போது தன் வசத்திலிருந்த ஆயிரமிரும்புக் கம்பிகளைய்வ் விடத்திருந்த தன் சினேகனிடத்தில் வைத்து விட்டுப் போனான் போனவிடத்திற் றிரவியம் சம்பாதித்ததைக் குறித்த நேகவுபாயம் பண்ணியும் பணமகப் படாமையால் மீண்டும் வீட்டுக்கு வந்து தன்னுடைய இரும்புக் கம்பிகளை கேட்டான் வைத்துக்கொண்ட சினேகன் மிகுந்த துராசையினா லிரும்புக் கம்பிகளை எலி கடித்து விட்டனவென்றான் இவனிந்தபூர்வத்தைக் கேட்டு நல்லதிருக்கட்டு மென்று சொல்லி வீட்டுக்குப் போனான் பிறகொரு நாள் சினேகிதன் பிள்ளையை விளையாடுகிறதற்காக லவனிடத்திலிருந்தெடுத்துக் கொண்டுபோய் மற்றொரு வீட்டிலொளித்து வைத்து பின்பு சினேகிதனிடத்தில் வந்துட்கார்ந்தான் அவனிடத்திலிருந்தவென் பிள்ளை யெங்கேயென சாவகாரி உன் பிள்ளையை பறவை தூக்கிக் கொண்டு போயிற்று என்றான். இதையவன் கேட்டு மிகவுங்கிலேசப்பட்டு இவனை யிழுத்துக் கொண்டு ஊரதிகாரியண்டைபோய் இந்த துஷ்டனென் பிள்ளையைக் கொண்டுபோய் ஒளித்து வைத்துவிட்டுப் பிள்ளையைப் பட்சியெடுத்துக் கொண்டுபோயிற்றென்கிறான் என் பிள்ளையை எனக்குக் கொடுப்பிக்க வேண்டுமென அதிகாரியிதைக் கேட்டுச் சாவகாரியை அழைத்து இவன் பிள்ளையெங்கே யிருக்கிறது சொல்லென அவன் இவன் பிள்ளையைப் பட்சிசொண்டுபோயிற்றென அதிகாரி யிதைக்கேட்டுக் குலுங்கக் குலுங்க நகைத்து இந்த அசம்பவம் இதுவரைக்கும் உலகத்திலில்லை அப்படியிருக்க நீ எப்படிச் சொல்லுகிறாயென அப்போது அவன் இதோராச்சரியமா எப்படி யிரும்புக் கம்பிகளை எலிகள் தின்றுவிட்டனவோ அப்படியே யிதுவும் சம்பவித்தது ஆண்டவனேயென இதைக்கேட்டு நியாயாதிபதி முன்னடந்தவைகளை விசாரித்து அறிந்துகொண்டு அவனுடைய இரும்புக் கம்பிகளை நீ கொண்டுவந்து கொடுத்தால் அவன் உன் பிள்ளையைக் கொண்டுவந்து கொடுப்பான் என்றவுடனே அவ்விருவரும் அப்படியே செய்து தங்கள் வீட்டுக்குப் போனார்களென்று இப்படிப்பட்ட கதைகளைச் சொல்லிப் பின்னுமந்ததமனகனுக்குக் கரடகன் சொன்ன பொருளைத் தெரிந்து கொள்ளாதவன் கல்லுக்குச் சமானம் அவனுக்கு உபதேசித்துப் பலனில்லையென்று சொல்லி கரடகததமனக நரிகள் இரண்டும் பிங்களனிடத்திற்குப் போம்போது சிங்கம் சஞ்சீவகனோடு கூடச் சண்டை பண்ணி அதைக் கொன்றுவிட்டு விசனமாய் உட்கார்ந்திருந்தது இதைக்கண்டு தமனகன் ராசாவைப் பார்த்துச் சுவாமி தாங்கள் சத்துருவைக் கொன்று துக்கப்படுகிறீர்கள் இது நியாயமல்லவே சத்துருவைக் கொல்ல வேண்டுமென்று சாஸ்திரமிருக்கிறது பிதாவானாலும் பந்துவானாலும் புத்திரரானாலும் மித்திரரானாலும் இவர்களில் யார் தன்னைக் கொல்லப் பிரவர்த்திக்கிறானோ அவனை ராசா கொல்லவேண்டும் சுதந்தரமாயிருக்கிற பெண்சாதியும் துஷ்ட சினேகிதனும் விபரீத சேவகனும் அசாக்கிரதையான மந்திரியும் நன்றியறியாதவனும் இருக்கலாகாதுமேலும் மெய்பொய் கடுமை மேன்மை கொலைதயை உதாரத்துவம் உலோபத்துவம் பலவழியாகத் திரவியஞ் சம்பாதித்தல் வெகு பெயருடைய சிநேகிதரும் இப்படிப்பட்ட பல குணங்கள் ராசாவுக்கிருக்க வேண்டுமென்று ராசநீதி யிலிருக்கின்றன அப்படியே தாங்கள் இது செய்தீர்களென்று சொல்லித் தமனகன் சிங்கத்தைச் சந்தோஷிப்பித்தது பிறகு சிங்கம் அந்தக்காட்டில்முன்போலத் தன்னிராச்சியத்தை அனுபவித்துக் கொண்டு சுகமாயிருந்தது.


முதலாவது மித்திரபேதம் அல்லது நட்புப்பிரிப்பு முற்றிற்று.