அத்தியாயம் 1

105.01k படித்தவர்கள்
32 கருத்துகள்

கண்ணாடியில்
முத்தமிடும் பூனையாக
நீ இரு.
பூனையை முத்தமிடும்
பிம்பமாக
நானிருக்கிறேன்.

- நேசமிகு ராஜகுமாரன்

னுஸிதாராவின் கூந்தல்போல் கறுத்து இருண்டு கவிழ்ந்திருந்தது வானம். ராகுல் ப்ரீத் சிங்கின் கண்களை ஒளிநகல் எடுத்து நட்சத்திரங்கள் வானெங்கும் இரைந்திருந்தன. சமந்தாவின் மார்பகப் பிளவை ஒத்த பிறைநிலா, நட்சத்திரங்களுக்கு இடையே டாலடித்தது. ஓர் அமானுஷ்ய நிசப்தம் அந்தப் பிராந்தியம் முழுக்க வியாபித்திருந்தது. பகல் முழுக்க ஆயிரம் ஆசைகளுடன் நடமாடிக் கொண்டிருந்த மனிதர்கள், நித்திரா தேவியை ஆலிங்கனம் செய்திருந்தனர். காற்று வரும் திசையில் நாசியை வைத்து முடங்கியிருந்தன நாய்கள். வெள்ளை ஆந்தைகள் துருத்திய கண்களுடன் தாழப் பறந்தன. ஒன்பதாவது பரிமாணத்தின் பிரம்மாண்ட வாசல் திறந்துகொண்டு லட்சக்கணக்கான ஆன்மாக்கள் உலா வர ஆரம்பித்தன. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத் தளத்தில் கோடிக்கணக்கான நீலநிற ஒளிப்புள்ளிகள் உய்க்கிபுய்க்கின. ஜகஜகஜக்ஜக்.... ஒளிப்புள்ளிகள் கோர்க்கப்பட்டு ஓர் உருவம் ஆனது. அந்த உருவத்துக்குள் ஆயிரம் மிருகங்களின் உடற்கூறுகள் ஒளிந்திருந்தன. சில்அவுட்டில் ஒரு மோனாலிஸா உருவம் யூகப்பொருளாய் பார்வையானது.

அந்த உருவம் ஒரு ஜந்துவை மார்போடு அணைத்திருந்தது. அந்த ஜந்து பிடியிலிருந்து விடுபட அல்லாடி மல்லாடியது.

ஓவ்... அது ஒரு பூனை!

அது ஒரு கறுப்புப் பூனை!

அது ஒரு  போன்ஸாய் புலி!

அது ஒரு மினியேச்சர் புலி!

பத்து கிலோ அக்மார்க் இருட்டு!

அது மெதுவாக வாய்திறந்து ‘மியாவ்’ என்றது. அந்த மியாவ் ஒலியின் டிஜிட்டல் கரகரப்பாய் எதிரொலித்தது. உருவத்தின் பிடியிலிருந்து வழுக்கி கீழே குதித்தது. இருபது டெஸிபல் சப்தம் எழுந்தது.

குதித்த பூனை உடலை முறுக்கிக்கொண்டது. பூனை பொசுபொசு கொழுகொழுப்பாய் இருந்தது. அதற்கு ஆரஞ்சுநிறக் கண்கள். மீசை மயிர்கள் துருத்தியிருந்தன. காற்றின் வாசனையை நாக்கைச் சுழற்றிச் சுவைத்தது. மணிக்கு 48 கிலோமீட்டர் ஓடும் கால்கள். முன்னங்காலில் ஐந்து ஐந்து நகங்கள். பின்னங்காலில் நான்கு நான்கு நகங்கள். பூனையின் கறுப்பு ரோமங்கள் வெல்வெட்டின. வலது முன்னங்காலை முன் தூக்கியது. மனிதனைவிட ஐந்து மடங்கு கேட்கும் சக்தி அதிகமுள்ள காதுகளை 180 டிகிரி திருப்பியது. 

மெதுவாக மிக மெதுவாக அடுக்குமாடிக் குடியிருப்பின் படிக்கட்டுகளில்  கறுப்புப் பூனை ஏற ஆரம்பித்தது. அதன் வால் கேள்விக்குறியாய் நிமிர்ந்து நின்றது.

முதல் தளத்தில் ஒரு சயாமிஸ் பூனை நின்றது. அது சாம்பல் நிறத்தில் மினுமினுத்தது. இரண்டாவது தளத்திலிருந்து ஒரு பெர்ஷியன் பூனை வெளிப்பட்டது.

தொடர்ந்து மூலை முடுக்குகளிருந்து பர்மிஸ், ஹிமாலயன், ஸ்காட்டிஷ், நார்வேஜியன் காட்டுப் பூனை, ஜப்பானிஸ் பாப்டெயில், துர்கிஷ் பூனைகள் பூத்தன.

கறுப்புப் பூனையை மற்ற பூனைகள் சூழ்ந்து நின்றன, குரோதமாய் கொலை வெறியாய் முறைத்தன. வித்தியாசமான ஒலியினில் மியாவின... கராவின. சூழ்ந்திருந்த பூனைகளில் மிகவும் அரிய வகையான அமெரிக்கன் ஒயர்ஹேர் பூனையும் இருந்தது. 

காட்சியமைப்பில் டன் கணக்கில் அமானுஷ்யம் பூத்தது.

கறுப்புப் பூனை மீது நாற்பதுக்கும் மேற்பட்ட பூனைகள் கொலை வெறியாய் பாய்ந்தன.

அவ்வளவுதான்...

ரௌத்திரமான ரணகளமான சண்டை ஆரம்பித்தது. தன்மீது பாய்ந்த பெர்ஷியன் பூனையை இடது முன்னங்காலால் சாத்தியது கறுப்புப் பூனை. பெர்ஷியன் பூனை தூரத்தே சொத்தேறியது. வலது முன்னங்காலால் ஸ்காட்டிஷ் பூனையை மொத்தியது கறுப்புப் பூனை. ஒன்றரை டன் மொத்து. தரை தேய்த்து கொண்டுபோய் சுவரில் மோதி இரண்டாய் மடிந்தது.

கறுப்புப் பூனை இப்போது மற்ற பூனைகளைக் கடித்துக் குதற ஆரம்பித்தது.

ஷான்கிளாட் வான்டாம் போல...

புரூஸ் லீ போல...

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஜாக்கிசான் போல...

சக் நாரிஸ் போல...

தாக்குதல் நடத்தியது கறுப்புப் பூனை. காற்றில் பறந்து சுழன்றடித்தது. அனைத்து பூனைகளையும் சிதறடித்தது கறுப்புப் பூனை.

கறுப்புப் பூனை வாய் முழுக்க சிவப்பு ரத்தம்!

தரை முழுக்க ரத்தம் ரங்கோலி போட்டிருந்தது.

பத்து நிமிடச் சண்டையில் அனைத்துப் பூனைகளும் தோற்று பின்னங்கால் பிடறியில் பட பயந்தோடின.

கறுப்புப் பூனை வெற்றிப் புன்னகை வெடித்தது. வாயில் வழியும் ரத்தத்தை முன்னங்கால்களால் துடைத்துக்கொண்டது.

எட்டாவது தளத்துக்குப் போனது.

பிளாட் எண் ஏ-42.

ஜன்னலுக்குத் தாவியது. உடலை வளைத்து நெளித்து ஜன்னலுக்குள் புகுந்து வெளியேறியது.

படுக்கையறைக்குள் ரேஷன் செய்யப்பட்ட நீலநிற வெளிச்சம். படுக்கையில் அவன் படுத்திருந்தான். அவனின் பெயர் சமரன். வயது 25. உயரம் 175 செமீ. 40 அங்குல மார்பளவு. பம்பையாய் வகிடு இல்லாத தலைகேசம். அடைப்புக் குறிபோல் புருவங்கள் கிருஷ்ணக் கண்கள். கிரேக்க மூக்கு. மீசையுடன் இணைந்த ரோமானிய தாடி. ரோஜா அடித்த உதடுகள். சிக்ஸ்பேக் உடல். நகாசு செய்யப்பட்ட ஸித் ஸ்ரீராம் குரல். அழகிய கைகால்கள். மொத்தத்தில் சமரன் ஒரு ஆன்டரோஜென் புயல்.

சமரன் இருபது வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்தான். சில ரசிகைகள் சமரனின் பெயரை இடது மார்பகத்தில் பச்சை குத்தியுள்ளனர். பச்சை குத்தப்படாத வலது மார்பகங்கள், ‘நாங்கள் மட்டுமென்ன பாவம் செய்தவர்களா?’ என முறையிடுகின்றன.

கறுப்புப் பூனை நின்று நிதானமாக சமரனின் தூங்கும் அழகை ரசித்தது.

தூக்கம் கூடுதல் தேஜஸை சமரன் முகத்தில் வாரி இறைத்திருந்தது.

ஆழமான சீரான சுவாசம்.

மார்பு பஸ்கி தண்டால் எடுத்தது.

தூங்கும்போது அழகாய் தூங்குபவனே உண்மையான ஆணழகன். சமரனின் தூங்கும் அழகை எந்தப் பருவப் பெண்ணாவது பார்த்தால், சிறிதும் லஜ்ஜையின்றி சமரனைப் பாலியல் பலாத்காரம் செய்துவிடுவாள்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை போல் உவமை, உவமான, படிம அழகுடன் தூங்குகிறான் சமரன்.

சமரனின் மீது பாய்ந்தது கறுப்புப் பூனை.

குளக்கரைக் கொக்கு தனது அலகுகள் கொள்ளாத பெரிய மீனைக் கவ்வி விழுங்க யத்தனிப்பது போல, கறுப்புப் பூனை சமரனைக் கவ்வியது.

சமரன் தூக்கத்திலிருந்து விடுபடாமல், அதே நேரம் கவ்வலிலிருந்து விடுபடத் துடிதுடித்தான். பற்கள் சமரனின் உடலைக் கிழித்துவிடாமல் பார்த்துக்கொண்டது கறுப்புப் பூனை.

கறுப்புப் பூனை சமரனைக் கவ்வியபடி ஜன்னலுக்கு வந்தது. ஜன்னல் கம்பிகள் விலகி வழிவிட்டன. சமரனுடன் பேய்த்தனமாய் ஓடியது. மொட்டைமாடிக்கு வந்து சேர்ந்தது.

சமரனுக்கு இப்போது விழிப்பு வந்தது.

"ஹே ஹேய்... யார் நீ? என்னை எங்கு தூக்கிச் செல்கிறாய்?”

சமரனைத் தனது காலடியில் துப்பிவிட்டு கண்சிமிட்டியது, கறுப்புப் பூனை.

"அமைதிப்படு சமரா... உனக்குப் பிடித்த இடத்துக்குத்தான் போகிறோம்!”

"உன்னால் எப்படி என்னைப் போல் பேச முடிகிறது?”

"ரகசியம், பரம ரகசியம் சமரா!”

"நீ பத்து கிலோ எடை இருப்பாய். நானோ அறுபது கிலோ இளைஞன். என்னை எப்படிக் கவ்விக் கொண்டு நடக்கிறாய்?”

"பூனைகள் பாஷையே நூறு இருக்கின்றன. நான் சகலகலாவல்ல பூனை!”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

"நான் என்ன தந்தால் என்னை விடுவாய்?”

"உன் அழுக்குத் தலையணை கொடு, நான் தூங்க. பேசாமல் இரு. உன்னைத் தூக்கிக்கொண்டு நான் வெகுதூரம் ஓட வேண்டியிருக்கிறது!”

மீண்டும் கறுப்புப் பூனை சமரனைக் கவ்வியது. கட்டடம் கட்டடமாய் தாவியது. எட்டு கால் பாய்ச்சல்.

ஏறக்குறைய நூற்றுக்கணக்கான கட்டடங்களைத் தாண்டி வந்துவிட்டது, கறுப்புப் பூனை.

"பூனைக்கு ஒன்பது உயிர்கள் என்பார்கள். உன் தாவலில் மெய்ப்பிக்கிறாய்.”

கறுப்புப் பூனை சிரித்தது.

மீண்டும் தாவித் தாவி ஓட ஆரம்பித்தது, பூனை.

இரண்டு மணி நேர ஓட்டத்துக்குப் பின் ஓர் எண்பது மாடி கட்டடத்தின் உச்சிக்கு வந்து சேர்ந்தது. கீழே 800 அடி அதலபாதாளம்.

சமரனைத் துப்பியது. “உனக்கு உயரம் என்றால் பயமா சமரன்?”

"ஆமாம்... பத்தடி உயரம் என்றால்கூட எனக்கு பயம்!”

"மிகவும் சிறப்பு... இப்போது நாம் எண்ணூறு அடி உயரத்தில் இருக்கிறோம்... நீயும் நானும் தரைக்குக் குதிக்கப் போகிறோம். பிழைப்பது நீயா நானா என்று பார்ப்போம்!”

"நான் இந்த விபரீத விளையாட்டுக்கு வரவில்லை!”

"உனக்கு நான் கொடுக்கும் ஒரே தெரிவு குதிப்பதே. ஒன்று நீயே குதிப்பது அல்லது நான் உன்னைத் தள்ளிவிடுவது!”

"எட்டிப்போ கறுப்புப் பூனையே!”

தப்பித்து ஓட முயன்றான் சமரன். கறுப்புப் பூனைக்கும் அவனுக்கும் கைகலப்பு மூண்டது. ஆனால், பூனையின் அசுர பலத்தின் முன் சமரனின் தாக்குதல் எடுபடவில்லை.

"குதி சமரா, குதி! “

"தர்பூசணி பழமாய் சிதறிவிடுவேன்!”

"எப்படித்தான் சிதறுகிறாய் என்று பார்ப்போம்... குதி!”

மறுதலித்துக் கொண்டிருந்தவனைக் கட்டடத்தின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியது. “கண்ணை மூடிக்கொண்டு குதி!”

சமரனைத் தள்ளிவிட்டுவிட்டு தானும் குதித்தது, கறுப்புப் பூனை.

காற்றில் நீந்த முயன்று தோற்று தரையில் தொமீரப் போனான் சமரன்!

- தொடரும்