போட்டி விவரங்கள்

3.97k படித்தவர்கள்
50 கருத்துகள்

மிழின் முன்னணி எழுத்தாளர்கள் எழுதும் தளத்தில் உங்கள் கதைகளும் இடம்பெற வேண்டுமா? Notion Press & Bynge Tamizh இணைந்து நடத்தும் பிரம்மாண்டமான சிறுகதைப் போட்டி அதற்கு வழி அமைத்துத் தருகிறது.

லட்சக்கணக்கான வாசகர்கள் வாசிக்கும் தளம் Bynge என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் தனது வாசகர் பரப்பை உருவாக்கியிருக்கிறது Notion Press. இரண்டும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியானது உலகின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள லட்சக்கணக்கான வாசகர்களிடையே உங்கள் எழுத்தைக் கொண்டுசேர்க்க ஓர் அரிய வாய்ப்பை உருவாக்கித் தருகிறது.

போட்டி குறித்து:

Notion Press & Bynge Tamizh இணைந்து நடத்தும் தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியின் நோக்கம் இந்தியாவின் மிகச் சிறந்த புனைவெழுத்தாளர்களைக் கண்டறிவதுதான். வாசகர்களின் மதிப்பீட்டை அடிப்படையாக வைத்தும், ஆசிரியர் குழு மற்றும் பதிப்புத் துறை வல்லுநர்களின் மதிப்பீட்டைப் பொறுத்தும் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பரிசு விவரம்:

அடுத்த மாபெரும் எழுத்தாளர்: ரூ. 25,000
எவ்வளவு பேர் வாசித்திருக்கிறார்கள், வாசகர்களின் மதிப்பீடு, ஆசிரியர் குழுவின் மதிப்பெண்கள் மூன்றையும் சேர்த்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படும்.

ஆசிரியர் குழுவின் தேர்வு: ரூ. 15,000
எங்களுடைய ஆசிரியர் குழு மற்றும் பதிப்புத் துறை வல்லுநர்களின் மதிப்பீட்டை அடிப்படையாக வைத்து இந்தப் பரிசு வழங்கப்படும்.

வாசகர்களின் தேர்வு: ரூ. 10,000
வாசகர்களின் மதிப்பீட்டையும் விமர்சனத்தையும் அடிப்படையாக வைத்து இந்தப் பரிசு வழங்கப்படும்.

ஆறுதல் பரிசு: 22 பேருக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ்

அடுத்த மாபெரும் எழுத்தாளர், ஆசிரியர் குழுவின் தேர்வு, வாசகர்களின் தேர்வு ஆகிய மூன்று பரிசுக் கதைகளுடன், ஆறுதல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 22 கதைகளையும் சேர்த்து நோஷன் பிரஸ் ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடும்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

போட்டியில் வெல்வது எப்படி?

போட்டியை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரியுங்கள்! பின்வரும் எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் வழியாக உங்கள் கதையை வெற்றிப் பாதைக்குக் கூட்டிச்செல்லலாம்.

1. மிகச் சிறந்த கதையைப் பதிவேற்றுங்கள்.

2. உங்கள் வாசகர்களை ஈர்க்க வழிசெய்யுங்கள். அழுத்தமான கதாபாத்திரங்கள், தனித்துவமான கட்டமைப்பு, கச்சிதமான கதைக்களன்கள், எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையும் அற்ற வாக்கிய அமைப்பு இவையெல்லாம் சிறந்த சிறுகதைக்கான குணங்கள்.

3. உங்கள் கதை இடம்பெற்றிருக்கும் தளம்தான் உங்கள் வெற்றிக்கான அடித்தளம். எனவே, உங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு உங்கள் கதையின் இணையதள இணைப்பை மின்னஞ்சல் வழியாக அனுப்புங்கள். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என நீங்கள் விரும்பும் எல்லாத் தளங்களிலும் உங்கள் கதையை விளம்பரப்படுத்துங்கள்.

4. வாசகர்கள் உங்கள் கதையை மதிப்பிடும்படி செய்யுங்கள்! உங்கள் கதை பெறும் ஸ்டார் ரேட்டிங்கின் அடிப்படையில் உங்கள் கதைக்கான புள்ளிகள் அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் 5 ஸ்டார் ரேட்டிங்க் பெற்றால் நீங்கள் 50 புள்ளிகள் பெறுவீர்கள்; 1 ஸ்டார் ரேட்டிங்க் என்றால் 10 புள்ளிகள்தான்.

5. நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றால் உங்கள் ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர், சக பணியாளர்கள் எல்லோரையும் ஒன்றுதிரட்ட வேண்டும். நோஷன் பிரஸ் நடத்தும் தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் நீங்கள் பங்கேற்கிறீர்கள் என்பதை எல்லோரும் அறியும்படி செய்யுங்கள். இதில் நீங்கள் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ அவ்வளவு புள்ளிகளைப் பெறுவீர்கள்!

புள்ளிகள் செயல்படும் முறை:

போட்டிக்கான புள்ளிகளை அதிக அளவில் பெறுங்கள். இந்தத் தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற போட்டிக்கான புள்ளிகள் மிகவும் அவசியம். வாசகர்கள் மற்றும் ஆசிரியர் குழுவினுடைய மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தப் புள்ளிகள் எடுத்துக்கொள்ளப்படும்.

வாசகர்களின் மதிப்பீடு: வாசகர்கள் தாங்கள் வாசிக்கும் கதைக்கு ஸ்டார் ரேட்டிங்கும் விமர்சனமும் வழங்க முடியும். வாசகர்களிடமிருந்து கதைகள் பெறும் ஒவ்வொரு ஸ்டார் ரேட்டிங்கைப் பொறுத்தும், எழுத்தாளர்கள் தங்கள் புள்ளிகளை உயர்த்திக்கொள்ள முடியும். நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நீங்கள் எழுதிய கதைகளைப் பகிர்ந்துகொள்வதன் வழியாக, நீங்கள் நிறைய புள்ளிகள் பெற முடியும்.

ஆசிரியர் குழுவின் மதிப்பீடு: இது ஆசிரியர் குழு மற்றும் பதிப்புத் துறை வல்லுநர்கள் வழங்கும் மதிப்பீடு. இது உங்களுடைய ஒட்டுமொத்த புள்ளிகளிலும், நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளிலும் அதிக தாக்கம் செலுத்தக்கூடியது. இந்த மதிப்பீடானது போட்டியின் கடைசி வாரத்தில் ஒவ்வொரு கதையிலும் சேர்க்கப்படும்.

கதைகளைப் பதிவேற்றுவதற்கான கடைசி நாள் ஜூலை 10, 2022.

ஜூலை 25, 2022 வரை வாசகர்கள் தங்கள் ரேட்டிங்கையும் விமர்சனத்தையும் வழங்கலாம். கதைகளுக்கான புள்ளிகள் இந்தக் காலகட்டத்திலும் தொடர்ந்து கிடைக்கும்.

ஜூலை 30, 2022 அன்று போட்டி முடிவுகள் வெளியாகும்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

விதிமுறைகள்:

1. உங்கள் சிறுகதைக்கு எந்த ‘தீம்’ கட்டுப்பாடும் கிடையாது. எந்த வகைமைகளில் வேண்டுமானாலும் எழுதலாம்.

2. 13 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்துகொள்ளலாம். வெளிநாட்டு வாழ் தமிழர்களும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம்.

3. எத்தனை கதைகள் வேண்டுமானாலும் பதிவேற்றலாம்.

4. ஒவ்வொரு கதையும் 750-2,000 வார்த்தைகள் அளவில் இருக்க வேண்டும்.

5. இங்கு பதிவேற்றப்படும் கதைகள் வேறு எங்கும் அச்சு வடிவிலோ டிஜிட்டல் வடிவிலோ இருக்கக் கூடாது.

6. தேர்ந்தெடுக்கப்படும் கதைகளின் தொகுப்பு அச்சுப் புத்தகமாகவும் மின்புத்தகமாகவும் நோஷன் பிரஸ்ஸால் வெளியிடப்படும். வெற்றிபெறும் கதைகள் ஒவ்வொன்றும் Bynge செயலியிலும் வெளியாகும்.

போட்டியில் பங்கேற்க இந்தச் சுட்டியைப் பார்க்கவும்:     https://bit.ly/tamilsscontest

போட்டி குறித்த சந்தேகங்களுக்கு echo@bynge.in என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள்.

அன்புடன்,
Notion Press & Bynge Tamizh