சிறுகதை

2.6k படித்தவர்கள்
32 கருத்துகள்

நிலா காலனிக்குச் செல்லும் வான டாக்ஸி டெர்மினலில் காத்திருந்தது.

இந்திரசேனன் சீழ்க்கையடித்தபடி வான டாக்ஸிக்கு நடந்தான். அவனுக்கு வயது 25. உயரம் 180 செ.மீ. நடுவகிடு தலைக் கேசம். கோடிப் பெண்களுக்குக் காதல் செய்தி அனுப்பும் கண்கள். சிற்பி செதுக்கலாய் மூக்கு. ரோமானிய தாடி. நறுமண வாய். மேக நிர்வாகம் பற்றி முதுகலைப் பட்டப் படிப்பு படித்திருந்தான்.

இந்திரசேனனுடன் ஜோடி சேர்ந்திருந்தான், அவனது நண்பன் ஆதவன். ஆதவன், நடிகர் நாகேஷின் கொள்ளுப்பேரன்போல இருந்தான். அங்க சேஷ்டைகள் அதிகம். நிமிடத்திற்கு 300 வார்த்தைகள் பேசுவான்.

“இந்திரா! என்ன சென்ட் பூசியுள்ளாய்?”

“நூறு பூக்களின் கூட்டு நறுமணத்தைப் பூசியுள்ளேன். இருபத்திநாலு மணி நேரம் தாக்குப் பிடிக்கும்!”

இருவரையும் ரோபோ வான நங்கை வரவேற்றாள்.

“ஹாய் வான நங்கை! உன் மார்பகங்கள் மாடிப் படிக்கட்டுகளில் அமைக்கப்பட்டிருக்கும் மரக்குமிழ்கள்போல் இருக்கின்றன!”

“பாராட்டுகிறாயா, வசவுகிறாயா?”

“சந்தேகமில்லாமல் பாராட்டுதான்!”

“உங்களுக்கான இருக்கை 26, 27இல் அமருங்கள். வான டாக்ஸி இன்னும் ஒரு சில நிமிடங்களில் கிளம்பும்!”

“நன்றி!”

இருவரும் அமர்ந்தனர். வான டாக்ஸிக்குள் முழுப் பார்வையைச் சுழற்றினான் ஆதவன்.

“பூமியின் அழகான இளைஞர்கள் எல்லாம் இந்த வான டாக்ஸிக்குள் இருக்கிறார்கள்!”

“நிலா காலனியில் நடக்க இருப்பது பிரபஞ்ச சுயம்வரம். நூற்றுக்கணக்கான கிரகங்களிலிருந்தும் நட்சத்திரங்களிலிருந்தும் செவ்வாய் கிரகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பிரபஞ்ச அழகிகள் வரவிருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு வாய்ப்பு அடிக்கடி கிடைக்குமா என்ன? இந்தப் பிரபஞ்ச சுயம்வரத்தில் எனக்கான கனவுப்பெண்ணைத் தேர்ந்தெடுத்து மகிழ்வேன்!”

“நான் வெறும் வேடிக்கைதான் பார்க்க வருகிறேன். எனக்குத் திருமண வயது வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும்!”

“காத்திரு தோழா!”

“சுயம்வரத்தில் கலந்துகொள்ளப் பதிவு செய்திருப்பாயே? உன் பதிவெண் என்ன?”

“என் பதிவெண், எக்ஸ் ஒய் இஸட் 66/2051!”

“சுயம்வரம் எத்தனை மணி நேரம் நடக்கும்?”

“பூமியின் நேரப்படி காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை. உணவு இடைவேளை மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை!”

“சுயம்வரத்தின் நிபந்தனைகள் என்னென்ன?”

“ஓர் ஆண் ஒரு பெண்ணை ஒரு பெண் ஓர் ஆணை மட்டுமே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க முடியும். தேர்ந்தெடுத்த பின் அங்கேயே காந்தர்வ திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் திருமணப் பதிவை அவரவர் கிரகத்துக்குத் திரும்பியவுடன் செய்து கொள்ள வேண்டும். ஜோடியைத் தேர்ந்தெடுத்த பிறகு சுயம்வரம் நடக்கும் இடத்திலேயே செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது. அவரவர் ஜோடியைத் தேர்ந்தெடுக்கும்போது வன்முறை கூடவே கூடாது. சுயம்வரம் முடிந்ததும் காத்திருக்கும் ஒளிவேக விண்கலங்கள், டாக்கியான் கலம், ஆன்மவேக, மனோவேக விண்கலங்கள் கிரகவாசிகளை அவரவர் கிரகங்களுக்குக் கூட்டிச் செல்லும். சுயம்வரத்தில் அனைத்து கிரகங்களின் உணவு வகைகளும் கிடைக்கும்!”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“வாவ்!”

வான டாக்ஸி வானில் உய்க்கிபுய்க்கியது.

தன்னைக் கடந்து செல்லும் ரோபோ வான நங்கையைப் பார்த்துக் கண்ணடித்தான் ஆதவன்.

“என்ன அன்பரே, கண்ணடிக்கிறீர்கள்! காதலிக்கலாமா?”

“ஹிஹி... சும்மா, கண் வேலை செய்யுதான்னு செக் பண்ணினேன்.”

வான டாக்ஸி நிலாவின் டெர்மினலில் போய் நின்றது. அனைவரும் இறங்கினர். இந்திரசேனனும் ஆதவனும் கைகோர்த்தபடி நிலாவின் புவியீர்ப்பு விசையை பூமியின் புவியீர்ப்பு விசைக்கு சமமாக்கும் வாகனத்தில் ஏறினர்.

லேசர் ஒளிக்கற்றைகளால் மேகங்களில் வர்ண ஜாலங்களை ஏற்படுத்தியிருந்தனர். நிலா காலனி திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ஹோலியின் வர்ணப்பொடிகள் வாரி இறைக்கப்பட்டிருந்தன.

குளிர்க் கண்ணாடி அணிந்த தீக்கோழிகள் நடனமாடின.

இளையராஜாத்தனமான, ஏ.ஆர்.ரகுமான்தனமான இசைத் துணுக்குகள் காற்றில் கீதம் பாடின.

திரும்பின இடங்களில் எல்லாம் வானவில்கள்.

சுயம்வர மண்டப வாசலில் பிங்க் நிற யானைகள் நின்று சுயம்வரத்துக்கு வரும் ஆண் பெண்களை வரவேற்றன.

மண்டபம் முழுக்க லட்சம் வகைப் பூக்கள் தோரணம் கட்டப்பட்டிருந்தன.

பஃபே முறையில் உணவு பரிமாறினர்.

இந்திரசேனனும் ஆதவனும் பச்சைப் பாசி கேசரியும் கிரில்மீன் வறுவலும் உண்டனர்.

மார்பகப் பிளவுகளும் தொடைகளும் தெரியும் வண்ணம் ஆடை அணிந்து ஒரு பாடகி பாடிக் கொண்டிருந்தார்.

“பிரபஞ்சக் குடிமக்களே, உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம். 247 கிரகங்களிலிருந்தும் நட்சத்திரங்களிலிருந்தும் பிரபஞ்ச அழகிகளும் அழகர்களும் வந்திருக்கிறீர்கள்! இன்னும் சிறிது நேரத்தில் சுயம்வரம் ஆரம்பிக்க இருக்கிறது. சுயம்வரத்தைத் தள்ளுமுள்ளு இல்லாமல் நடத்த ஒத்துழையுங்கள்!”

அறிவிப்பு எல்லா கிரக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு நகாசு செய்யப்பட்ட டெஸிபல்லில் ஒலித்தது.

சுயம்வர மண்டபத்திற்குள் புறாக்கள் பறந்தன. மயில்கள் தோகை விரித்தன.

இந்திரசேனன் தயாரானான்.

பிரபஞ்சப் பெண்கள் அணிவகுத்து நின்றனர்.

முதலில் ஒரு பெண் நின்றிருந்தாள். அவளுக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. ஏழடி உயரம் இருந்தாள். “இவள் பெயர் மிச்சு. வயது 21 பூமி வருடங்கள். இவள் நட்சத்திரா 999ஐச் சேர்ந்தவள். நட்சத்திராவின் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறாள். இவள் உணவை இவளே தயாரித்துக் கொள்ளும் வல்லமை பொருந்தியவள்!”

இந்திரசேனன் இறுக்கமான முகத்துடன் அடுத்த பெண்ணுக்கு நகர்ந்தான்.

அடுத்த பெண் முகம் நிறைய நூற்றுக்கணக்கான கண்களுடன் நின்றிருந்தாள். உடல் முழுக்க நீலநிறம். கை கால்களில் எட்டு எட்டு விரல்கள்.

“இவள் பூமியிலிருந்து 200 ஒளி வருடங்கள் தூரத்தில் இருக்கும் கிரகத்தில் வசிக்கிறாள். மாந்திரீகம் கற்றவள். நினைத்த உருவத்துக்கு மாறக்கூடியவள். இவள் பெயர் நிகிநிகி. வயது 25 பூமி வருடங்கள். தொடர்ந்து எட்டு மணி நேரம், தாம்பத்ய சுகம் தருவாள்!’’

நிகிநிகி பத்துக்கும் மேற்பட்ட உருவங்களுக்கு மாறிக் காட்டினாள்.

“என்னப்பா, இவள் ஓ.கே.யா?” ஆதவன்.

“ம்ப்ச்!” உதடு பிதுக்கினான், இந்திரசேனன்.

அடுத்த பிரபஞ்சப் பெண்ணுக்கு நகர்ந்தான். 

பிங்க் நிறத்தில் மினுமினுத்தாள். நான்கு கால்கள், ஆறு கைகள். தலையில் இரு அழகிய கொம்புகள். அவளிடத்தில் தாழம்பூ வாசனையடித்தது. நாக்கைப் பாம்புபோல துருத்தினாள்.

“இவள் பெயர் பூஷி. வயது 24 பூமி வருடங்கள். உயரம் தேவைக்கு ஏற்ப மாறிக் கொள்வாள். இவளின் ஆயுட்காலம் 500 வருடங்கள். இவளுடன் எந்தக் கிரகத்து ஆண் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் அவன் 500 வருடங்கள் வரை வாழ்வான். இவர்களின் கர்ப்ப காலம் ஒரு மாதம். இவள் நீரிலும் நிலத்திலும் வாழ்வாள்!”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

பூஷி கண்ணடித்தாள்.

“என்னைத் திருமணம் செய்து கொள், கண்ணாளா!”

அவளின் வார்த்தைகள் உடனே மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழாகின.

“நன்றி சகோதரி. என்னைவிட சிறப்பான ஆண்மகன் உனக்குக் கிடைப்பான்!”

வார்த்தைகள் அவள் மொழியில் போய் விழுந்தன.

“இந்த எம்.ஜி.ஆர். பட வசனத்தை இன்னும் ஆயிரம் வருடங்களானாலும் விட மாட்டீங்களாடா?” ஆதவன் கிசுகிசுத்தான்.

பறவைபோல் இருந்தாள் அடுத்த பெண். அவளுக்கு இரு இறக்கைகள் இருந்தன. தலையில் சேவல் கொண்டை.  பறவையின் அலகுபோல் மூக்கு நீண்டு வளைந்திருந்தது.

“இவள் பெயர் லோமோ. குஷியோ கிரகத்தைச் சேர்ந்தவள். இவள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பாள். ஒரு நாளைக்கு 20 கிலோ உணவு உண்பாள். இவளுக்கு வயது 26 பூமி வருடங்கள். இவளது எடை வெறும் 40 கிலோக்கள். உன்னைத் தூக்கிக் கொண்டு ஏழாம் வானம் வரை பறப்பாள்!”

லோமோ குயில்போல் கூவினாள்.

பாம்புபோல ஒரு கிரகத்துப் பெண்.

எலிபோல ஒரு கிரகத்துப் பெண்.

விதவிதமான வர்ணங்களில் கூடுதல் மார்பகங்களுடன் உபரி யோனிகளுடன் நான்கு எட்டு கால்களுடன், பிரபஞ்சப் பெண்கள்!

“என்ன நண்பா, இதுவரை இருநூத்திசொச்சம் கிரகப் பெண்களைப் பார்த்துவிட்டாய். ஒருத்தியைக்கூட பிடிக்கவில்லையா?”

“இல்லை!” என்றவனின் கண்கள் தூரத்தில் நிலைத்தன. ஒரு பூமிப் பெண் சுயம்வர இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். திராவிட நிறம். ஜல்லிக்கட்டுக் காளையின் திமில்போல மார்பகங்கள். பிடரியிலும் நெற்றியிலும் வியர்வைத் துளிகள் பூத்து நின்றிருந்தன. நாவல் நிற உதடுகள். மூக்கில் ஒற்றை மூக்குத்தி. மிக லேசான மாறுகண்கள். இரு உள்ளங்கைகளிலும் தாமரைகள் பூத்திருந்தன. சொர்க்கத்துக்கு வழி எனத் தொப்புள் சுழிப்பு காட்டியது.

“எனக்கு இவளைப் பிடித்திருக்கிறது!”

“அடக் கடவுளே! இவள் பணிப்பெண். சொற்ப கூலிக்கு வேலை செய்பவள். பூமியின் மலைக் கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசிப் பெண்!”

“எனக்கு அசாதாரண பெண்மைகள் பிடிக்கவில்லை. ஒப்பனையில்லாத கிராமிய அழகு என் இதயத்தைக் கவர்கிறது. சுயம்வரத்தில் அனைத்துப் பெண்களும் சமவாய்ப்பைப் பெறுகிறார்கள். வா பெண்ணே, திருமணம் செய்து கொள்வோம்.” 

சங்கோஜி நாணினாள்.

அருகே இழுத்து, “உன் பெயர் என்ன பெண்ணே?” காதலாய்க் கசிந்துருகினான் இந்திரசேனன்.

“செண்பகக்குழல்வாய்மொழி!” சொன்ன உதட்டில் முத்தமிட்டு அவளை இறுக அணைத்தான்.

பிரபஞ்ச சுயம்வரத்துக்கு வந்த அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர்.

“செண்பா! உனக்குத் தங்கச்சி கிங்கச்சி இருக்காங்களா?” ஆர்வமாய்க் கிசுகிசுத்தான் ஆதவன்.