அத்தியாயம் 1

164.47k படித்தவர்கள்
112 கருத்துகள்

1

“நமோ நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணா”

பணக்காரத்தனமும் படாடோபமும் நிறைந்திருக்கும் அப்பெரிய மாளிகையை, பூஜையறையிலிருந்து வந்துகொண்டிருந்த சாம்பிராணிப் புகையும் பத்தியின் நறுமணமும் குத்தகைக்கு எடுத்திருக்க, பூஜையறையிலிருந்து வெளிவந்து, ஹாலில் அமர்ந்திருக்கும் தன் ஆருயிர் மகள் அஹானாவின் அருகில் சென்று, தன் கையில் இருந்த கற்பூரத் தட்டினை நீட்டிய அன்னை சாயாதேவியை அமைதியாக நிமிர்ந்து பார்த்தாள் அஹானா.

கருணையும் காருண்யமும் இரு பெரும் கருவிழிகளில் குடிகொண்டிருக்க, நல்ல சிவந்த நிறத்துடன் கம்பீரத்துடன் ராஜமாதாவின் நிமிர்வுடன் பணிவும் கலந்திருக்க, நடுத்தர வயதிலும் பேரழகியாக நின்றிருந்த தாயைக் கண்டு எப்போதும் போல மனதிற்குள் பெருகிய துயரத்தினை, எப்போதும் போலவே தனக்குள் அடக்கிக்கொண்டவளாக அன்னை நீட்டிய கற்பூரத் தட்டின் தீப ஜோதியைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்ட மகளை பரிவும் பெருமிதமுமாக பார்த்த சாயா தேவியின் பார்வை, மகளிற்குப் பின்புறமாக இருந்த சுவரின் பாதியளவு பெரிதாக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்த போட்டோவின் ஃபிரேமிற்குள் சந்தன மாலையுடன் சிரித்துக்கொண்டிருந்த கணவன் சத்ய சூரியனின் முகத்தில் ஏக்கத்துடன் பதிந்து மீண்டது.

‘நீங்க பார்த்துக்கிட்டுதான் இருக்கீங்களாங்க?’

‘நம்ம பொண்ணு ரொம்ப வளர்ந்துட்டா’

‘உங்களைப் போலவே அவளும் பிஸினஸ்ல ரொம்ப ரொம்ப திறமையானவளா இருக்கா’

‘எல்லாத்திலயும் உங்களைப் போலவே இருக்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறவ, குணத்திலயும் உங்களைப் போலவே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?’

‘ஆனா, இல்லையே! சூரியன்னு பேர் கொண்ட நீங்க தண்ணிலவின் குளுமையோட வாழ்ந்துட்டு போயிட்டீங்க! உங்க மகளோ, உங்க பேர்ல இருக்க சூரியனின் தகிப்பையெல்லாம் தனக்குள்ள வாங்கிக்கிட்டவ மாதிரி, கோபத்தின் முழு உருவமா இருக்காளே!’

வில்லாக வளைந்திருக்கும் அழகிய புருவம் சுளித்திருக்க, அளவாக செதுக்கப்பட்டதைப் போன்றிருக்கும் நாசியும் பளிங்குக் கன்னமும் லேசாக செந்நிறம் கொண்டிருக்க, இயல்பாகவே கொவ்வை நிறத்தை தனதாக்கியிருக்கும் இதழ்களில் கீழுதட்டினை முல்லைப்பல் வரிசையின் மேற்பற்களால் கோபத்துடன் அழுந்த கடித்தவாறு கையிலிருந்த ஃபைலினை ஆராய்ந்துகொண்டிருக்கும் மகளைப் பார்த்த சாயாதேவியின் மனதிற்குள் கவலை மேகங்கள் சூழத் தொடங்கின.

“டாமிட்! என்ன பண்ணி வெச்சிருக்காங்க இவங்க! ஒரு ஃபைலை ஒழுங்கா மெயின்டெயின் பண்ண முடியாததுகளை எல்லாம் வேலைக்கு வெச்சுக்கிட்டு? ஜெகன்! ஜெகன்”

சாயாதேவி கவலைப்பட்டதைப் போலவே கையிலிருந்த ஃபைலினைத் தூக்கி விசிறிவிட்டு, அஹானா போட்ட சத்தத்தில் அடுத்த நொடியே அவள் முன் வந்து நின்றான் ஜெகன்.

“என்ன வேலை பார்க்கறீங்க நீங்கள்லாம்? ஒரு ஃபைல் என்னோட பார்வைக்கு வர்றதுக்கு முன்னால அது கரெக்டா இருக்கான்னு செக் பண்ண மாட்டீங்களா?”

“இல்ல மேம், எப்பவுமே அப்படித்தான் செய்வேன். ஆனா, இன்னிக்கு நீங்க அவசரமா கேட்டதால”

“அவசரமா கேட்டா என்ன ஏதுன்னு பார்க்காம அப்படியே தூக்கிக்கிட்டு வந்து என் கையில கொடுத்துருவீங்களா? எல்லாக் குப்பையையும் நான்தான் சரியாக்கணும்னா, நீங்கள்லாம் எதுக்கு இருக்கீங்க? என்னோட ஒவ்வொரு செகண்ட்டுக்குமான வேல்யூ தெரியுமா உனக்கு?”

“தெரியும் மேம். இந்த விஷயத்துல தப்பு என்னோடது இல்ல மேம்.  ஃபைலைச் செக் பண்ணுனது கனிகான்றதால நானும் நம்பிக்கையா”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“ஷட் அப் ஜெகன். கனியைப் பத்தி எனக்குத் தெரியும். அவ ஒருநாளும் இவ்வளவு கேர்லெஸ்ஸா வேலை பார்க்கவே மாட்டா?”

“நோ மேம். வந்து?”

“ஐ செட், ஷட் அப். அந்தக் குப்பைகளை எல்லாம் பொறுக்கிக்கிட்டு போய் யார்கிட்ட இருந்து அத ஹேண்ட் ஓவர் வாங்கினியோ, அவங்ககிட்ட கொடுத்து என்னை வந்து மீட் பண்ண சொல்லு. நவ் யூ மே லீவ்”

“யெஸ் மேம்”

சிறிதும் தயவு தாட்சண்யமின்றிக் கூறிவிட்டு அஹானா அடுத்த ஃபைலை எடுத்து அதே ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் புரட்டத் தொடங்கிவிட, அவள் வீசியெறிந்த பேப்பர்களை எடுத்து அடுக்கியவாறு அங்கிருந்து விலகி சென்ற ஜெகனைப் பார்க்க சாயாதேவிக்கே பாவமாக இருந்தது.

“இவ்வளவு ஹார்ஷா பிஹேவ் பண்ணாத அஹானா. ஜெகன் ஒண்ணும் வெளி ஆள் கிடையாது. நீ அவனை இப்படி ட்ரீட் பண்றத உங்க தாத்தா பார்த்தார்னா ரொம்ப வருத்தப்படுவார்டா”

“மாம். தாத்தாவைப் பத்தி எனக்குத் தெரியும். பிஸினஸ்ல யாருக்காகவும் எதுக்காகவும் காம்ப்ரமைஸ் ஆகவே கூடாதுன்னு எனக்குக் கத்துக் கொடுத்ததே அப்பாவும் தாத்தாவும்தானே?”

இயல்பாகக் கூறத் தொடங்கிய அஹானாவின் முகம் பாறையாக இறுகிப் போய்விட, அப்பாறைக்குள் கசியும் கடும் சோகத்தினை அன்னை இனம் கண்டுவிடக் கூடாது என்கிற கவனத்துடன் அன்னையைப் பார்த்தாள் அஹானா.

“மாம். வேலை இருக்கு. ஸீ யூ லேட்டர்”

இறுக்கத்துடன் கூறியவாறு டீப்பாயில் கிடந்த அத்தனை பைல்களையும் அப்படியே அள்ளிக்கொண்டு தன் அலுவலக அறைக்குள் சென்று மறைந்துவிட்ட மகளைப் பார்த்து ஒரு  பெருமூச்சுடன் பூஜையறையை நோக்கிச் செல்லத் தொடங்கினாள் சாயாதேவி.

‘டாட்! டாடி! வொய் டாட் வொய்?’

தன்னிச்சையாக மனம் அரற்றிக்கொண்டிருக்க, நேரெதிர் சுவரில் போட்டோவாகத் தொங்கிக்கொண்டிருந்த தந்தையின் முகத்தினைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அஹானாவிற்கு வசந்தமாக, சொர்க்கமாக வாழ்ந்த தந்தையுடனான நாட்கள் மீண்டும் வரவே வராதா என்று ஏக்கமாக இருந்தது.

சத்ய சூரியன்! அஹானாவின் அன்புத் தந்தை! ஒற்றை மகளைப் பெற்றெடுத்த, அவளை ஆணுக்கு நிகராக சர்வ திறமைகளுடன் வளர்தெடுத்த அருமையான மனிதர்!

தொழிலில் எத்தனை உயரங்களைத் தொட்டிருந்தாலும் மனைவி, குழந்தை, குடும்பத்திற்கென முன்னுரிமை கொடுத்து, அவர்களைக் கொண்டாடுவதில் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அவர்.

எவருமே எதிர்பாராத வகையில் ஓரு விமான விபத்தில் அவர் அவர்களைப் பிரிந்து ஐந்தாண்டுகள் முழுதாக கடந்திருந்தாலும் அஹானாவினால் மட்டும் அவரது இழப்பினை இன்றளவிலும் மனதார ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மகளை ஒரு மஹாராணியாகத் தாங்கும் தந்தையின் இழப்பு அஹானாவிற்கு அளவிட முடியா பேரதிர்ச்சியாக இருந்தாலும் அவரால் வழிநடத்தப்பட்டிருந்தவள் தந்தையைப் போலவே அவரது இடத்தில் இருந்து, கல்லூரிகூட முடிக்காத இளம்பிராயத்திலேயே குடும்பத்தின் பொறுப்புகளை அவர்களது தொழில்களையும் தன் கையில் எடுத்துக்கொண்டிருந்தாள்.

பேத்தியைத் தனித்துவிட மனமில்லாதவராகத் தன் ஒரே மகனின் இழப்பினையும் கடந்து வந்து, பேத்திக்கு உறுதுணையாக பிஸினஸைத் தானும் கவனித்துக் கொள்ளத் தொடங்கிய, அஹானாவின் தாத்தாவான ரவீந்தராலும்கூட, அவளது தந்தையின் இழப்பையும் இடத்தையும் ஒரு சிறு துளியளவும் இட்டு நிரப்ப முடியவில்லை என்பது அஹானாவிற்கு மட்டுமே தெரிந்த உண்மை.

வெளித்தோற்றத்தில் எதற்கும் அலட்டிக்கொள்ளாத பெண்ணாக, ஸ்ட்ரிக்டான முதலாளியாக, எவருக்காகவும் தன் குணத்தினை மாற்றிக்கொள்ளாத பிடிவாதக்காரியாக, தொழில்முறைப் போட்டிகளை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டு வெற்றிபெறும் சிங்கப் பெண்ணாக அனைவருக்கும் காட்சி தரும் அஹானா, உள்ளே தன்னைப் பேணும் தந்தையின் அன்பிற்காக, ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயத்திலும் அவர் அவளுக்காகக் காட்டும் அக்கறைக்காக, அவரது அன்பு அரவணைப்பிற்காக, அவரது அறிவுரைக்காக, அவரது வழிகாட்டுதலுக்காக, இன்னும் இன்னுமென அவளது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் தன் தந்தை தன்னருகில் தன்னுடன் இருந்திருந்தால் எப்படி இருக்குமென எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கிறாள்.

தந்தைக்கு அடுத்தபடியாக, அவளை நன்றாக அறிந்து வைத்திருக்கும் பெரும்பாலான நேரங்களில் அவளுடனேயே இருந்துகொண்டிருக்கும் ரவீந்திரனுமேகூட, தந்தைக்கான அஹானாவின் இந்த ஏக்க முகத்தினை அறிந்திருக்கவில்லை.

தாயறிந்தால், கணவனுடன் ஓருயிர் ஈருடலாக வாழ்ந்தவளின் வேதனையை மகளது ஏக்கம் மேலும் அதிகரிக்கச் செய்துவிடும் என்பதால், சாயாதேவியிடம் அஹானா அவளது துக்கத்தினை மட்டுமல்லாமல், எந்தவொரு உணர்வினையும் காட்டாமல் இருக்க பழகிக் கொண்டுவிட்டாள்.

வயோதிக வயதில் மகனது இழப்பினையும் தாங்கிக்கொண்டு, மனபாரத்துடன் தன் முதிய கரத்தில் பேத்தியைத் தனித்து விடாமல் பற்றிக்கொண்டு, அவளது வேகத்திற்கு இணையாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு அஹானாவிற்கு ஈடாக தானும் ஓடிக் கொண்டிருக்கும் தன் அன்புத் தாத்தாவிடம் அவளது மனபாரங்களை இறக்கிவைத்து, அவரது இழப்பின் சோகத்தினை இன்னும் கூட்டிவிடக் கூடாது என்கிற கவனத்துடன் அவரிடத்திலும் அஹானா என்றுமே எதையுமே வெளிக்காட்டியதில்லை.

அதன் காரணமாக சத்ய சூரியனான அவளது தந்தை அருகிலிருந்தபோது அன்றலர்ந்த பூவாக, அனைவரிடத்திலும் அன்பை மட்டுமே வெளிக்காட்டும் இயல்புடன் எப்போதுமே சிரித்த முகமாக, சந்தோஷத்தினை மட்டுமே அறிந்திருப்பவளாக அனைவருக்கும் அதையே வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அஹானா, தற்போது கடின முகத்துடன், பிடிவாதக்காரியாக, சிரிப்பு என்று ஒன்று இருக்கிறதென்பதையே அறியாத இறுக்கத்துடன், எவரும் எளிதில் நெருங்கிப் பேச பயப்படும் நிமிர்வான, அச்சமற்ற தோற்றத்துடன் வாழ பழகிவிட்டிருந்தாள் அல்லது மாறிப்போய் விட்டிருந்தாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஒருவகையில், வெளிப் பார்வைக்கு அவள் அணிந்துகொண்டிருந்த மேற்கூறிய முகமூடிகள் அனைத்தும் பெண்ணான அதிலும் பேரழகியான அவளுக்குப் பெரும் பாதுகாப்பாக இருந்ததால், அந்த முகமூடிக்குப் பின்னால் சர்வ ஜாக்கிரதையாக மறந்தும்கூட அதனைக் கழட்டிவிடாக் கவனத்துடன் ஒளிந்துகொண்டிருந்தாள் அஹானா.

தற்போதைப் போல எப்போதாவது தனித்திருக்க கிடைக்கும் தருணங்களில் மட்டும், அவள் அவளாக இருக்கும்போது, இன்றுபோல தந்தையிடம் விடைகேட்டு கலங்கி நிற்கும் மகளுக்கு ஆதரவாக நேரில் வரமுடியாவிட்டாலும் தன் இயல்பு புன்னகையில் மகளுக்கு ஆறுதலளிப்பார் சத்ய சூரியன்.

அச்சிரிப்பினைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சில நிமிடங்களே போதும், யானை பலத்துடன் மீண்டும் தன்நிலைக்குத் திரும்பிவிடுவாள் அஹானா.

“ஸாரிடா கண்ணா. பர்மிஷனனெல்லாம் கேட்க பொறுமை இல்ல, அதனால நானே உள்ள வந்துட்டேன். வரலாமில்ல?”

“தாத்தா! ஆனாலும் நீங்க இருக்கீங்க யாருங்க!”

சத்ய சூரியனின் கம்பீரத்திற்கு எள்ளளவும் குறையா கம்பீரத்துடன் பேத்தியை எடைபோடும் கண்களுடன் வந்து நின்ற ரவீந்திரனைக் கண்ட அஹானாவின் முகம் அவளையும் அறியாமல் லேசாக மலர்ந்துவிட்டது.

“வெளிய ஜெகனைப் பார்த்தேன். காலங்காத்தாலயே ஃபுல் ஃபார்முல இருக்கியேடா!”

“இன்வாய்ஸ் ஃபைலைக் கேட்டா, எதையோ ஒரு குப்பையைக் கொண்டு வந்து கொடுத்திருந்தான் அதனாலதான்”

“இட்ஸ் ஓக்கே டா கண்ணா. நீ காரணமில்லாம கோபப்பட மாட்டேன்னு எனக்கும் தெரியும். ஆனாலும், அதிக கோபம் உடம்புக்கு நல்லதில்ல பாரு. அதான் கொஞ்சம் கூல் பண்ணலாமேன்னு வந்தேன்.”

“ஏன் தாத்தா? உங்க ஃபிரெண்டோட பேரனைத் திட்டிட்டேன்னு வருத்தமா என்ன?”

“அட நீ வேறடா! அவனுக்காக நான் ஏன் வருத்தப்படப் போறேன்! என் கவலையெல்லாம் வேற ஒருத்தனைப் பத்தி”

“வேறொருத்தனைப் பத்தி எதுக்குக் கவலைப்படணும் தாத்தா?”

“கவலையில்லாம இருக்குமாடா? வேலை பார்க்கிறவனே இந்தப்பாடு படும்போது, நாளப்பின்ன உன்னை மேரேஜ் பண்ணிக்க போறவனைப் பத்தி கவலைப்பட்டுதானே ஆகணும்”

“டோண்ட் வொர்ரி தாத்தா, அப்படியொருத்தன் இருந்தாத்தானே கவலைப்படறதுக்கு? நான்தான் மேரேஜே பண்ணிக்க மாட்டேனே?”

பேத்தியின் உறுதியைக் கேட்டு அதிர்ந்தவராக ரவீந்திரன் அஹானாவைப் பார்த்துக்கொண்டிருக்க, அந்த அஹானாவின் உறுதியை உடைத்துத் தரைமட்டமாக்கப்போகும் அந்த ஒருவன்,  தரையிறங்கிய விமானத்திலிருந்து கீழிறங்கிக்கொண்டிருந்தான்.

(தொடரும்...)