அத்தியாயம் 1
எண்ணம்
புது வருடம்
புது முயற்சி
புது உயரம் தொடுவோம்
ஏற்றுமதி வியாபாரம்
இயற்கையை இல்லறத்துக்குள் வளர்த்திரு
பழக்கத்தில் பல மாற்றம் செய்வோம்
அமைதிக்குப் பழகு
அறிவுக்குப் படி, எழுது
நேரத்தின் வேகத்திற்கு நட
ஆண்மீகம் தேவை
சிறப்புற சிந்தி
காலத்தில் கடமை செய்
இறைவன் அருள் என்றும் உண்டு
-------------
முயற்சி
எப்போதும் மனதை
எளிமையாகவும் தூய்மையாகவும்
அமைதியாகவும் வைத்திருக்க விரும்பு
நம் மனப் போக்கினை
ஆளக் கற்றுக் கொண்டால்
அமைதி குடிகொள்ளும்
இன்பம் வரும்
துன்பம் வரும்
தண்ணீர் மேலுள்ள பந்து போல் இரு
இன்பம் என்று மேலே எரிந்தாலும்
துன்பம் என்று நீரில் மூழ்கினாலும்
நீர் பரப்புக்கு உடனே வந்துவிடும்
அலையும், காற்றில் பந்து அதன் போக்கில் போகும்
ஆயிரம் திட்டம் தீட்டி எது நடந்தாலும்
அங்கிருந்தே இலக்கை நோக்கிப் போ
சேர்ந்தவைகள் சேரட்டும்
போனவைகள் போகட்டும்
இருப்பவைகளை பாதுகாத்துக் கொள்
இனி சேமிக்க திட்டமிடு
முயற்சி எடு
----------------------
தளராதே
தைரியமும் தன் நம்பிக்கையையும்
தளரவிடாதே, தொடர் முயற்சி நல்லது
நல்ல முயற்சி மேன்மை தரும்
வாழ்வில் வளர்ச்சி தரும்
ஆண்டவனை நினை
அரசனும் மதிப்பான்
அனைவரும் போற்றுவர்
தூற்றியவர்கள் மாறுவர்
வெற்றியை தேடிப் பிடி
முயற்சித்தால் காலம் நேரம் கூடிவரும்
பெற்றோர் ௨ற்றோர் வளர்ப்பர்
கற்றோர் மற்றோர் அறிவுரைப்பர்
காலம் பல கற்றுத்தரும்
அனைத்தும் அறிந்து ஆராய்ந்து
தனக்கொரு பாதையை தேர்ந்தெடுப்பர்
அதற்கு மனைவியும் மக்களும் துணை
வாழ்வான் வளருவான் ஆயினும்
பல துன்பம் தேடிவரும்
அதிலே அனுபவம் அறிவான்
அனுபவமே இறைவன் என்று அறிவான்
ஆனந்தித்திலும் துன்பத்திலும்
அமைதியையே நாடுவான்
அங்கேதான் ஞானம் பிறக்கிறது
அன்பின் உறைவிடம்
இதை அடையவே வாழ்வெல்லாம் தேடுகிறோம்
தினம் தினம் புதியன கற்றுகொள்
------------
திருத்தம் தேவை
தினம் பழையன வேண்டாதவைகளை மாற்றிகொள்
திருத்தம் தேவைதான்
இடம் சூழ்நிலை பல கற்றுதரும்
கற்றுக் கரை சேர்
மாற்றமும் தேவைதான்
பணவர்த்தனை பலவும் நடக்கும்
அறிந்து தெரிந்திரு
நஷ்டம் தவிர்த்திரு
உறவும் நட்பும் தேவைதான்
நீ சிக்கலில் மாட்டாதவரை
மன அமைதி தேவை
யோகமும் தியானமும் தேவைதான்
ஆன்மீகம் அறிந்து
வாழ்வை நடத்து
போற்றுவார் புகழ்வார்
மகிழ்ச்சியில் மயங்கிடாதே
வேகமாக மன அமைதிக்கு வா
தூற்றுவார் பரிகசிப்பர்
துவண்டு வெறுத்திடாதே
வேகமாக மன அமைதிக்கு வா
கூடவே இருந்து குழி வெட்டுவார்
உஷாராய் இரு விழுந்து விடாதே
விழுந்தாலும் வேகமாய் வெளியே வா
பல விதத்தில் உன்னை தாழ்த்துவர்
மன வலிமையை கைவிடாதே
அறிவும் ஆன்மீகமும் காப்பாற்றும்
ஆசையையும் பயத்தையும் ஒதுக்கி இரு
அமைதியையே விரும்பு
ஆண்டவன் உன்னை விரும்புவான்
உன்னை நீ ஆயிரம்
மாற்றிக் கொண்டாலும்
இன்னும் மாற்ற முடியாதவை
சில இருக்கத்தான் செய்யும்
வருந்தாதே தளராதே
வாழும் வரை திருத்தம் இருக்கும்
நல்லன புதியன பழகிக்கொண்டே இரு
பழையன தீயவைகளை திருத்திக்கொண்டே இரு
சுயதூய்மை என்றும் தேவை
உன்னை அறியாமல்
முன்னேறிக் கொண்டே இருப்பாய்
மாற்றம் மற்றவர்க்கு நன்கு தெரியும்
மயங்கி விடாதே
மாற்றத்தை நிறுத்திக் கொள்ளாதே
முன்னேற்றம் தடைபடும்