கலவை - அமெரிக்காவிலிருந்து அய்யம்பாளையம் வரை

By பவா. செல்லத்துரை 470 படித்தவர்கள் | 0.0 out of 5 (0 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Young adult fiction Mini-SeriesUpcoming4 அத்தியாயங்கள்
திருவண்ணாமலையைச் சுற்றி ரமணாஸ்ரமம் பகுதிகளிலும், மலை சுற்றும் பாதைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் குடியிருக்கிறார்கள். அவர்களில் பலர் மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக, ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தவர்கள். பெரும் கலைஞர்கள், புகைப்படக்காரர்கள், ஓவியர்கள், திரைப்பட இயக்குநர்கள் எனப் பலரும் தங்கள் அடையாளங்களை மறைத்துவிட்டு, அமைதியானதொரு வாழ்வை இங்கு முன்னெடுக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கும் காதல், காமம், விரோதம், பகைமை என்று மனித வாழ்வில் தினந்தோறும் நிகழும் எல்லாமும் உண்டு. இவையெல்லாம் அவர்களுக்குள் மட்டும் அல்லாமல், அவர்களைச் சுற்றியுள்ள கிராமப் பெண்கள், ஆண்கள் வரை இந்த அன்பும் அத்துமீறலும் நிகழ்வது உண்டு. கலவையான இவர்களின் வாழ்வுக்கும் இந்த நகரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த நகரம் இவர்களை வேடிக்கை பார்க்கும் ஒரு மனிதன் போலவே நடந்துகொள்ளும். இவர்களின் வாழ்வின் சந்தோஷங்கள், துக்கங்கள், காதல், காமம் என ஒரு விரிவாக்கமே இந்நாவல்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
0 ரேட்டிங்ஸ்
0.0 out of 5
சமீபத்திய நடவடிக்கை

இதே போன்ற தொடர்கள்