அத்தியாயம் 1
பீட்டரும் மர்ம புத்தகமும்
பல ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஜோஸோ’ என்ற கிராமம் இருந்தது.பாரிசு நகரின் அழகிய கிராமம் அது.அந்த கிராமத்தில் தனது வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் மார்க் வெல்ஸ். அவருக்கு பீட்டர் என்ற மகன் இருந்தான்.அவன் எப்பொழுதும் புத்தகமும் கையுமாக இருப்பான். மார்க் வெல்ஸ் கிராமத்தின் அருகில் உள்ள நகர சுரங்கத்தில் வேலைசெய்து கொண்இருந்தார்.அவரது வேலை தொழிலாளர்களை மேற்பார்வை செய்வதாகும்.
அவரின் மனைவி இப்பொழுது அவருடன் இல்லை.பீட்டர் பிறந்த சில மாதங்களிலேயே மார்க்குக்கும்,அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவரது மனைவி மார்க்கையும்,பீட்டரையும் விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.அவர் சென்றதிலிருந்து மார்க் தான் பீட்டரை வளர்த்துக்கொண்டு வருகிறார்.
பீட்டர் ‘வோசன் ஏன்ட்’ என்ற பள்ளியில் படித்து வந்தான்.அவனுக்கு நண்பர்கள் என்று எவரும் கிடையாது.அதற்காக அவன் ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை.புத்தகங்களையே தனது நண்பர்களாக்கி கொள்வான்.எப்பொழுதும் தனிமையிலேயே தனது நேரங்களை செலவிடுவான்.
அது ஒரு அழகான காலைப்பொழுது.ஜோடி சிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தம் காதுகளுக்கு விருந்தாய் இருந்தது.தீடிரென்று அலார சத்தம் ஒலித்தது.அலாரத்தை நிறுத்திய மார்க் காலை உணவை தயார் செய்ய சமையலறைக்குச்சென்றார்.இவ்வளவு நேரமாகியும் பீட்டர் படுக்கையிலிருந்து எழவில்லை.ஆகையால் மார்க்,பீட்டரின் அறைக்குச்சென்றார்.
‘‘பீட்டர்,எழுந்திரு பள்ளிக்கு நேரம் ஆகிறது.’’ மார்க் அவனை எழுப்பினார். அதற்கு பீட்டர் ‘'சரி வருகிறேன்,அப்பா.’’ என்று சோம்பலுடன் கூறினான்.அவன் தனது அறையிலிருந்து இறங்கி,கீழே உள்ள சமையலறைக்குச்சென்றான்.அங்கு அவன் அப்பா அவனை முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தார்.
‘‘மன்னித்து விடுங்கள் அப்பா,இரவு தூங்குவதற்கு நேரமாகிவிட்டது.’’என அவன் மார்க்கை சமாதானப்படுத்தினான். அதற்கு மார்க் ’‘இந்த ஒரே காரணத்தை தான் நீ தினமும் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் பீட்டர்.
’‘சரி ஏற்கனவே நிறைய நேரம் ஆகிவிட்டது,சீக்கிரம் சென்று தயார் ஆகு,எப்பொழுதும் போல இன்றும் பள்ளிக்கு தாமதமாக செல்லாதே’’என்று மார்க் பீட்டரை துரிதப்படுத்தினார். பீட்டர் தயார் ஆகி தனது பையை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு
வந்தான். ‘‘வா,பீட்டர் இதோ உன் உணவு தயார்‘’ என்று கூறி மார்க் சேன்விச்சை மேஜையின் மீது வைத்தார்.
‘‘இல்லை அப்பா எனக்கு நேரமாகிவிட்டது,எனக்கு இந்த ஆப்பிள் போதும்’’ என்றுக்கூறிக்கொண்டே பீட்டர் வெளியே ஓடினான்.அவன் அப்பா ‘'உன்னைதிருத்தவே முடியாது’’ என்று கூறிவிட்டு அவரது வேலைக்கு தயார் ஆகினார்.பீட்டர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச்சென்றான்.
அவன் பள்ளியில் அவனுக்கு நண்பர்கள் இல்லையென்றாலும், அவனை கேலி செய்கிறவர்கள் நிறையவே இருந்தார்கள். பீட்டர் பள்ளி நூலகத்திலிருந்து சில புத்தகங்களை எடுத்துக்கொண்டுவந்தான். அவன் நடந்து வரும்போது ஒரு கால் அவனை கீழே விழச்செய்தது. அங்கிருந்த அனைவரும் அவனை பார்த்து சிரித்தார்கள். ‘'இங்கே பாருங்கள் புத்தகப்புழு, படுத்துக்கொண்டே படிப்பதை...’’ என்றான் செட்ரிக்.
செட்ரிக் பார்ப்பதற்கு பீட்டரை விட அளவில் பெரியதாக இருப்பான்.அவனுடைய பொழுதுபோக்குகளில் பீட்டரை கேலி
செய்வதும் ஒன்றாகும். ஆனால் பீட்டர் அவனை எதிர்த்து எதுவும் பேசவில்லை.கீழே விழுந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். அன்றைய நாள் பள்ளி முடிந்தது பீட்டர் தனது வீட்டிற்குச் சென்றான்.அவன் வீட்டிற்குச்சென்ற போது அவனது அப்பா அவனுக்கு முன்பாகவே வீட்டில் இருந்தார். சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு கதவை திறந்தான்.மார்க் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.
’‘அப்பா, இன்று விரைவில் வேலை முடிந்துவிட்டதா? எனக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்துவிட்டீற்கள்’’ என்று மார்க்கிடம் கேட்டான். ‘’ ஓ, வில்லியம் வந்துவிட்டாயா! ஆம்... இன்று நகரத்தில் கனமான மழையும், இடியுமாக இருந்ததால் வேலை பாதியில் நின்றுவிட்டது.
சரி, நீ சென்று தயார் ஆகிவிட்டு வா,இரவு உணவு சாப்பிடலாம்’’ என்றார். இருவரும் சாப்பிட்டு விட்டு தங்கள் அறைகளுக்குச் சென்றனர். அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல விடிந்தது. இன்று பீட்டருக்கு விடுமுறை நாள்.அதனால் நகர நூலகத்திற்கு செல்ல தயார் ஆகிக்கொண்டிருந்தான். அப்பொழுது மார்க் ‘'பீட்டர் நான் வேலைக்கு கிளம்புகிறேன். வீட்டை பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.
அவர் சென்றவுடன் பீட்டர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு நகர நூலகத்திற்கு சென்றான்.நூலகத்திற்குள் நுழைந்தவுடன், அங்கிருந்த நூலக மேற்பார்வையாளர் அவனிடம் ’‘என்னப்பா பீட்டர் ! நன்றாக இருக்கிறாயா’’ என்று கேட்டார். ‘'ஏதோ இருக்கிறேன் எவான்ஸ், சரி நான் முன்பு கேட்டிருந்த புத்தகத்தை கண்டுபிடித்துவிட்டீர்களா?’’ என்று பீட்டர் எவான்ஸிடம் கேட்டான்.
அதற்கு அவர் ’‘நீ கேட்டு இல்லை என்று சொல்வேனா! மூன்றாவது வரிசையில் உள்ள ஏழாவது ரேக்கில் உள்ளது, சென்று எடுத்துக்கொள்’’ என்று அவர் கூறினார்.
அவர் பார்ப்பதற்கு முதியவர் போல தோற்றமளித்தார். ‘'மிகவும் நன்றி எவான்ஸ்’’ என்று கூறி, பீட்டர் அந்த புத்தகத்தை எடுக்க விரைந்தான். அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவன் அங்கிருந்து கிளம்பினான். பீட்டர் நூலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு ஆற்றுப்பாலம் இருந்தது.அந்த பாலத்தைக் கடக்கும் வேளையில் திடீரென ஒரு வெண்ணிறப்புறா அவனுடைய பாதையில் குறுக்கிட்டது.அந்த புறாவை கண்ட பீட்டர் சட்டென தனது சைக்கிளை நிறுத்தினான்.
திடீரென சைக்கிளை நிறுத்தியதால் பீட்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.கீழே விழுந்ததில் அவன் பையில் இருந்த புத்தகம் ஆற்றில் விழுந்தது.அவன் அதனை கவனிக்கவில்லை. பீட்டர் எழுந்தவுடன் அவனின் பார்வை அந்த புறாவின் பக்கம்
திரும்பியது.அந்த புறா இவ்வளவு நடந்தும் அந்த இடத்தைவிட்டு அசையாமல் அப்படியே இருந்தது.
அதனை பரிதாபமாகப்பார்த்த பீட்டர் ‘'உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி பாலத்தின் நடுவே இருக்கிறாய்?’’ என்று கேட்டான்.
அந்தப்புறாவுக்கு புரிந்ததோ, இல்லையோ அது கண்சிமிட்டியவாறே தன் இடது இறக்கையை பார்த்தது. பீட்டர் அதன் அருகில் சென்றான்.அந்தப்புறா அவனைப்பாரத்து பயந்து இரண்டு அடி பின்னே சென்றது. அதற்கு பீட்டர் ’‘பயப்படாதே’’ நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன் என்று கூறியவாறே அதன் இடது இறக்கையைப் பார்த்தான். அதன் இறக்கையில் ஒரு காயம் இருந்தது.
அதனைக்கண்ட பீட்டர் ‘'காயம் சற்று பெரியதாக இருக்கிறதே. சரி நீ என்னுடன் வா. நான் உனக்கு முதலுதவி செய்கிறேன்’’ என்று கூறி
அந்தப்புறாவை தனது சைக்கிள் கூடையில் வைத்தான். கீழே கிடந்த தனது பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான். ஆனால் அவன் நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகம் ஆற்றில் விழுந்தது பீட்டருக்குத்தெரியாது. இதே வேளையில் பீட்டரின் அப்பா மார்க் வெல்ஸ் சுரங்கத்தில் தனது வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.
மார்க், வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியை அழைத்து ‘'ரியான் நீங்கள் சென்று டேனியலை அழைத்து வாருங்கள். வரைபடத்தைப்பற்றி அவருடன் ஆலோசிக்க வேண்டும்’’ என்று கூறினார். அதற்கு அவர் ‘'சரி. மார்க் என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்.’‘ அப்பொழுது மார்க்கை நோக்கி மற்றொரு தொழிலாளி வந்தார்.அவர் ’‘மிஸ்டர் மார்க் இந்தப்புத்தகம் சுரங்கத்தின் உள்ளே கிடைத்தது’’ என்று கூறி ஒரு பெரிய, பழைய புத்தகத்தை மார்க்கிடம் கொடுத்தார். அதனை வாங்கிப்பார்த்த மார்க்கால் அந்தப்புத்தகத்தை திறக்கமுடியவில்லை.அந்த புத்தகத்தின் நடுவே ஒரு சிறிய குழி இருந்தது.வித்தியாசமான சின்னங்களும், விசித்திரமான விலங்குகளும் அந்தப் புத்தகத்தின் அட்டையில் பொறிக்கப்பட்டிருந்தது.
அன்றைய நாள் மார்க்குக்கு அதிக வேலை இருந்ததால் அந்தப் புத்தகத்தை அவர் ஒரு ஓரமாக வைத்துவிட்டார். மாலை அவரின் வேலை முடிந்ததும் அந்தப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டுக்குள்ளே அவர் நுழைந்ததும், ஏதோ ஒரு சத்தம் அவரின் கவனத்தை ஈர்த்தது. அது பீட்டரின் சத்தம். அவன் நாற்காலியிடம் ‘'நீ இனி என்னுடனே இருக்கலாம். இன்னும் சில நாள்களில் உன் காயம் ஆறிவிடும்.’’ என்று கூறிக்கொண்டிருந்தான்.
இதனைக் கண்ட மார்க் அவன் அருகில் சென்றுபார்த்தார். நாற்காலியின் அடியில் ஒரு புறா இருந்ததை அவர் அப்பொழுதுதான் கவனித்தார்.பீட்டர் அதனுடன் தான் பேசிக்கொண்டிருந்தான். மார்க் தனது கையில் இருந்த அந்தப் புத்தகத்தை மேஜையின் மீது வைத்துவிட்டு ’‘பீட்டர் இது என்ன? உன் புது நண்பனா?’’ என சிரித்துக்கொண்டே பீட்டரிடம் கேட்டார்.
அதற்கு பீட்டர் ’‘அப்பா இது நான் வரும் வழியில் அடிபட்டுக்கிடந்தது. நான் வீட்டுக்கு எடுத்து வந்து முதலுதவி செய்தேன். இதை நான் என்னுடனே வைத்துக்கொள்ளட்டுமா?’’ எனக்கேட்டான். ’’ சரி. அது உன் விருப்பம். ஆனால் இதனால் எந்த வித பிரச்சனையும் வந்துவிடக்கூடாது" என மார்க் கூறினார். உடனே பீட்டர் "சரி அப்ப. நான் இதற்கு பெர்டி என பெயர் வைத்துள்ளேன்.இனி நீங்கள் இதனை பெர்டி என அழைக்கலாம்" என்று கூறினான்.
"சரி விரைவாக உண்டுவிட்டு தூங்கச்செல். அதிக நேரம் விழித்துக்கொண்டிருக்காதே. எனக்கூறிக்கொண்டவாறே மார்க் தன் அறைக்குச்செல்ல முற்பட்டார்.
அப்பொழுது பீட்டர் "அப்பா இங்கு பாருங்களேன்! என் கையில் இந்த நட்சத்திர வடிவ அடையாளம் இரண்டு நாளாய் இருக்கிறது. என்னவென்றே தெரியவில்லை?"என்று கூறினான். அதனைப்பார்த்த மார்க் "இதே போன்ற அடையாளம் எனக்கும்
சிறுவயதிலிருந்தே இருக்கிறது.எனக்கும் இது என்னவென்று தெரியவில்லை பீட்டர்" என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றார்.
பீட்டர் தனக்கு புது நண்பன் கிடைத்த மகிழ்ச்சயில் அன்றைய இரவில் நிம்மதியாக உறங்கினான். பீட்டரின் அறையில் ஒரு அழகிய ஜன்னல் இருந்தது. பெர்டி அந்த ஜன்னலின் வழியாக வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.தனக்கு ஒரு பாதுகாப்பான வசிப்பிடம் கிடைத்துவிட்டதாக உணர்ந்த பெர்டி ஜன்னலின் ஓரமாக படுத்துக்கொண்டது.
அடுத்த நாள் காலை பீட்டர் தனது பையை எடுத்து பார்த்தான். ஆனால் அந்தப்பையில் அவன் எடுத்து வைத்த புத்தகம் இல்லை. அவன் அறை முழுவதும் அதனை தேடினான்.ஆனால் அந்தப் புத்தகம் அங்கு எங்கும் இல்லை. வீடு முழுவதும் தேடிப்பார்த்தபொழுது ஹாலில் உள்ள மேஜையின் மீது இருந்த அவன் அப்பாவின் புத்தகத்தைப்பார்த்தான்.அதனை அவன் திறக்க முயன்றான்.அவனாலும் அதனை திறக்கமுடியவில்லை.
அவன் அந்தப் புத்தகத்தை தான் எடுத்து வந்த புத்தகம் என்று தவறாக நினைத்துக் கொண்டான். பீட்டர் தனுக்குத்தானே "நான் அவசரத்தில் தவறான புத்தகத்தை எடுத்து வந்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் இந்த புத்தகம் மற்றவைகளைவிட வித்தியாசமாக இருக்கிறதே!" என்று முணுமுணுத்துக்கொண்டான். அவன் அந்த புத்தகத்துடன் மீண்டும் நூலகத்திற்கு சென்றான். அந்த மர்ம புத்தகத்தை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, வேறு ஒரு புத்தகத்துடன் வீடு திரும்பினான்.
அன்று இரவு அந்த மர்ம புத்தகம் பற்றிய குழப்பத்துடனே வெகுநேரம் ஐன்னல் அருகில் அமர்ந்து கொண்டு யோசனை செய்து கொண்டிருந்தான். பிறகு பெர்டியிடம் "சரி பெர்டி. நீ தூங்கு" என்று கூறி அவனும் படுத்துக்கொண்டான். ஆனால் அந்த புத்தகம் பற்றிய குழப்பம் அவனை விட்டு போகவில்லை. அவன் தந்தையோ அந்த புத்தகத்தை பற்றி யோசிக்கக்கூட இல்லை. அந்த புத்தகம் இப்பொழுது நகர நூலகத்தில் பாதுகாப்பாக இருக்கிறது.
- தொடரும்
விவாதங்கள் (20)
Amrutha P likes
Ebenezer
கதையில் ஒரிடத்தில் பீட்டரின் பெயர் வில்லியம் என கூறப்பட்டுள்ளதே? மற்றபடி கதை சாதாரணமாக ஆரம்பித்துள்ளது
0 likesSenthil Kumar Raja
இந்த வில்லியம் யார்
0 likesMonster 54
இருவர் கையிலும் நட்சத்திரம் இருந்தது.
0 likesMonster 54
புத்தகம் நூலகத்திற்கு சென்றது. இனி என்ன நடக்க போகிறதோ.
0 likesDr. Ajo
இருவரின் கையிலும் உள்ள நட்சத்திர வடிவிலான அடையாளம் சற்று புதிதாக உள்ளது
0 likesBalaji
First tamil book my daughter ever read. She really enjoyed the first chapter
1 likesJanan Raj
nice story
1 likesBird
Mmm statred
1 likesSriram Balaji
wonderful story
0 likes