மீண்டும் தாலிபன்

By பா.ராகவன் 1.45 லட்சம் படித்தவர்கள் | 4.6 out of 5 (240 ரேட்டிங்ஸ்)
Non Fiction Politics Mini-SeriesOngoing32 அத்தியாயங்கள்
நம் ஊரில் எத்தனை சாதிகள் உண்டோ, அதில் சரி பாதி அளவுக்காவது ஆப்கனிஸ்தானில் அன்றைக்குப் போராளிக் குழுக்கள் இருந்தன. நான்கு பேர் கொண்ட குழுவில் தொடங்கி நான்காயிரம் பேர் கொண்ட குழுக்கள் வரை. அன்றைக்கு என்பது 1978ல் தொடங்குகிறது. சோவியத் யூனியன் உயிருடன் இருந்த காலம். அமெரிக்க-சோவியத் பனிப்போர் உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த நேரம். ஆப்கனிஸ்தானை சோவியத் படைகள் ஆக்கிரமித்தன. அதன் விளைவாக சுதந்தரப் போர். போர் என்பதால் போராளிக் குழுக்கள். அத்தகைய குழுக்களில் ஒன்று, தாலிபன். கந்தஹாரில் மையம் கொண்டிருந்த முல்லா முஹம்மது ஓமரால் வழி நடத்தப்பட்டுக்கொண்டிருந்த குழு அது. 1992ல் சோவியத் பாதுகாப்புடன் ஆண்டுகொண்டிருந்த நஜிபுல்லா தலைமையிலான ஆப்கன் அரசு மாறி, அடுத்தடுத்துப் பல பேருடைய அரசுகள் நிறுவப்பட்டன. எதுவும் நிலைக்கவில்லை. எப்போதும் சிக்கல். எங்கெங்கும் கலவரம். உள்நாட்டு யுத்தம் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயம். 1993ல் பாகிஸ்தான் பிரதமராகும் பேனசிர் புட்டோ சில வர்த்தகக் காரணங்களுக்காக ஏதாவது ஒரு ஆப்கன் போராளிக் குழுவைத் தத்தெடுத்துக்கொண்டு தனக்குச் சாதகமான ஓர் அரசை ஆப்கனில் நிறுவிக்கொள்ள விரும்பினார். அவர் தேர்ந்தெடுத்தது தாலிபன். ஆயுதங்களும் பணமும் பயிற்சியும் வழங்கி வளர்த்துவிட்டது அவர்தான். 1996 முதல் 2001 வரை தாலிபன்கள் ஆப்கனிஸ்தானை ஆண்டார்கள். அல்லாவே அலறும்படியான முல்லாக்களின் ஆட்சியாக அது இருந்தது. ஆப்கனின் மிக நீண்ட ரத்த சரித்திரத்தில் அது ஒரு அழிக்க முடியாத கறையாக நிலைபெற்றது. பிறகு 9/11 சம்பவம். அமெரிக்கப் படையெடுப்பு. மீண்டும் ஒரு ஆப்கன் யுத்தம். முல்லா முஹம்மது ஓமர் இறந்தார். ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டார். தாலிபன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். ஆப்கனிஸ்தான் மிக விரைவில் அமைதிப் பூங்கா ஆகிவிடும் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்தார்கள். இந்த இருபதாண்டுக் காலமாகவும் அங்கே வெடிச் சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. இன்றைக்கு அது மீண்டும் உச்சமடைந்து, மறுபடியும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு, அதிபர் தப்பி ஓட்டம், அமெரிக்கா திரும்பவும் படையனுப்புகிறேன் பேர்வழி என்று சொம்புடன் வந்து உட்காரப் பார்ப்பது எல்லாம் நடக்கிறது. நடக்கக் கூடாத ஒன்று ஏற்கெனவே நடந்துவிட்டபடியால். ஆம். மீண்டும் தாலிபன்கள் ஆப்கன் அதிகார பீடத்தைக் கைப்பற்றிவிட்டார்கள். இனி இடிபடுவதற்கு அங்கே புத்தர் சிலைகள் மிச்சமில்லை என்றாலும், மிதி படுவதற்கு மக்கள் மிச்சம் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆப்கனிஸ்தானில் இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களும் வேண்டாத ஆட்சி மாற்றமும் 1996ல் தாலிபன்களால் ஏற்பட்ட அபாயங்களைக் காட்டிலும் பல மடங்கு வீரியமுள்ளவை. மத அடிப்படைவாத சக்திகள் தீவிரவாதிகளாகவும் இருந்து ஆட்சியைப் பிடித்தால் நாடு என்னாகும் என்று அன்றைக்குப் பார்த்தோம். அதே மதத் தீவிரவாதிகள் சூழ்ச்சி அரசியலும் பயின்றுவிட்டு ஆட்சிக்கு வரும்போது இன்னும் என்னென்ன விவகாரங்கள் வெடிக்கும் என்று இனி பார்க்கலாம். 'நிலமெல்லாம் ரத்தம்' ஆசிரியரின் அடுத்த அரசியல் தொடர் இது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
240 ரேட்டிங்ஸ்
4.6 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"priya dharsan"

தூக்கம் தேவையில்லை.....

"Yathav priyan"

very informative and eye-opening

"Chandiran D.s"

நிச்சயமாக இந்தக் கதை மிகவும் அருமை பல உண்மைகள் தெரிய தற்போதுள்ள தாலிபான் கொ...Read more

"Hari"

awaited one

5 Mins 15.76k படித்தவர்கள் 205 விவாதங்கள்
அத்தியாயம் 1 20-08-2021
5 Mins 10.4k படித்தவர்கள் 71 விவாதங்கள்
அத்தியாயம் 2 20-08-2021
5 Mins 8.21k படித்தவர்கள் 89 விவாதங்கள்
அத்தியாயம் 3 21-08-2021
5 Mins 6.9k படித்தவர்கள் 77 விவாதங்கள்
அத்தியாயம் 4 22-08-2021
5 Mins 6.08k படித்தவர்கள் 39 விவாதங்கள்
அத்தியாயம் 5 23-08-2021
6 Mins 5.15k படித்தவர்கள் 20 விவாதங்கள்
அத்தியாயம் 6 24-08-2021
6 Mins 4.94k படித்தவர்கள் 34 விவாதங்கள்
அத்தியாயம் 7 25-08-2021
5 Mins 4.81k படித்தவர்கள் 33 விவாதங்கள்
அத்தியாயம் 8 26-08-2021
6 Mins 4.69k படித்தவர்கள் 18 விவாதங்கள்
அத்தியாயம் 9 27-08-2021
5 Mins 4.55k படித்தவர்கள் 29 விவாதங்கள்
அத்தியாயம் 10 28-08-2021
5 Mins 4.6k படித்தவர்கள் 30 விவாதங்கள்
அத்தியாயம் 11 29-08-2021
5 Mins 4.67k படித்தவர்கள் 26 விவாதங்கள்
அத்தியாயம் 12 30-08-2021
5 Mins 4.58k படித்தவர்கள் 19 விவாதங்கள்
அத்தியாயம் 13 31-08-2021
5 Mins 4.41k படித்தவர்கள் 24 விவாதங்கள்
அத்தியாயம் 14 01-09-2021
5 Mins 4.12k படித்தவர்கள் 24 விவாதங்கள்
அத்தியாயம் 15 02-09-2021
5 Mins 3.84k படித்தவர்கள் 33 விவாதங்கள்
அத்தியாயம் 16 03-09-2021
5 Mins 3.84k படித்தவர்கள் 21 விவாதங்கள்
அத்தியாயம் 17 04-09-2021
5 Mins 3.71k படித்தவர்கள் 19 விவாதங்கள்
அத்தியாயம் 18 05-09-2021
5 Mins 3.81k படித்தவர்கள் 22 விவாதங்கள்
அத்தியாயம் 19 06-09-2021
5 Mins 3.72k படித்தவர்கள் 16 விவாதங்கள்
அத்தியாயம் 20 07-09-2021
5 Mins 3.31k படித்தவர்கள் 40 விவாதங்கள்
அத்தியாயம் 21 08-09-2021
5 Mins 3.31k படித்தவர்கள் 19 விவாதங்கள்
அத்தியாயம் 22 09-09-2021
5 Mins 3.07k படித்தவர்கள் 16 விவாதங்கள்
அத்தியாயம் 23 10-09-2021
5 Mins 2.75k படித்தவர்கள் 17 விவாதங்கள்
அத்தியாயம் 24 11-09-2021
5 Mins 2.76k படித்தவர்கள் 15 விவாதங்கள்
அத்தியாயம் 25 12-09-2021
5 Mins 2.93k படித்தவர்கள் 19 விவாதங்கள்
அத்தியாயம் 26 13-09-2021
5 Mins 2.83k படித்தவர்கள் 11 விவாதங்கள்
அத்தியாயம் 27 14-09-2021
5 Mins 2.88k படித்தவர்கள் 16 விவாதங்கள்
அத்தியாயம் 28 15-09-2021
5 Mins 2.92k படித்தவர்கள் 14 விவாதங்கள்
அத்தியாயம் 29 16-09-2021
5 Mins 2.88k படித்தவர்கள் 18 விவாதங்கள்
அத்தியாயம் 30 17-09-2021
5 Mins 2.18k படித்தவர்கள் 36 விவாதங்கள்
அத்தியாயம் 31 18-09-2021
5 Mins 1.03k படித்தவர்கள் 15 விவாதங்கள்